Published : 11 Sep 2018 07:05 PM
Last Updated : 11 Sep 2018 07:05 PM

விஜய் சேதுபதியின் ‘96’: ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘96’ படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒளிப்பதிவாளரான பிரேம் குமார், இயக்குநராக அறிமுகமாகும் படம் ‘96’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், ஹீரோயினாக த்ரிஷா நடித்துள்ளார். ஜனகராஜ், பகவதி பெருமாள், காளி வெங்கட், ஆடுகளம் முருகதாஸ், தேவதர்ஷினி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் சார்பில் நந்தகோபால் தயாரித்துள்ள ‘96’ படத்துக்கு, கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். விஜய் சேதுபதி - த்ரிஷாவின் பள்ளி வாழ்க்கை தொடங்கி, மூன்று கட்டங்களாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இதில், புகைப்படக் கலைஞராக நடித்துள்ளார் விஜய் சேதுபதி.

விநாயகர் சதுர்த்தி விடுமுறையை முன்னிட்டு வருகிற வாரம் இந்தப் படம் ரிலீஸாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், சிவகார்த்திகேயனின் ‘சீமராஜா’ மற்றும் சமந்தாவின் ‘யு டர்ன்’ ஆகிய படங்கள் ரிலீஸாவதால், போதிய தியேட்டர்கள் இல்லாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அக்டோபர் 4-ம் தேதி ‘96’ படம் ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’ படம் அக்டோபர் 5-ம் தேதி ரிலீஸாகும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது. இப்போது அதே வாரத்தில் ‘96’ படமும் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ‘சீதக்காதி’ படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப்போகும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x