Published : 11 Sep 2018 12:50 PM
Last Updated : 11 Sep 2018 12:50 PM

இந்த மாதத்துடன் ‘விஸ்வாசம்’ ஷூட்டிங் நிறைவு?

இந்த மாத இறுதியுடன் ‘விஸ்வாசம்’ படத்தின் ஷூட்டிங் நிறைவடையலாம் எனத் தகவல் கிடைத்துள்ளது.

அஜித் நடிப்பில் சிவா இயக்கி வரும் படம் ‘விஸ்வாசம்’. தொடர்ந்து நான்காவது முறையாக இந்தக் கூட்டணி இணைந்துள்ளது. அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான ‘விவேகம்’ படத்தைத் தயாரித்த சத்யஜோதி ஃபிலிம்ஸ், இந்தப் படத்தையும் தயாரிக்கிறது.

அஜித் இரு வேடங்களில் நடித்து வரும் இந்தப் படத்தில், ஹீரோயினாக நயன்தாரா நடிக்கிறார். விவேக், தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகி பாபு, போஸ் வெங்கட், ரமேஷ் திலக் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கிறார்.

மதுரை, தேனி பின்னணியில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங், ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டி மற்றும் ராஜமுந்திரியில் நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு பொங்கல் விடுமுறையில் படம் ரிலீஸ் என அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்நிலையில், இந்த மாத இறுதியுடன் படப்பிடிப்பு முடிந்துவிடும் எனத் தகவல் கிடைத்துள்ளது. அப்படி இல்லாவிட்டாலும், அடுத்த மாதம் (அக்டோபர்) முதல் வாரத்தில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்துவிடும் என்ற தகவல் கிடைத்துள்ளது.

‘விஸ்வாசம்’ படத்துக்குப் பிறகு எச்.வினோத் இயக்கத்தில் நடிக்கப் போகிறார் அஜித். ‘பிங்க்’ இந்திப் படத்தின் தமிழ் ரீமேக் தான் அந்தப் படம் என்றும், மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் அந்தப் படத்தைத் தயாரிக்கிறார் என்றும் செய்தி வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x