யார் அந்த விஷம்?

Published : 05 Sep 2018 09:19 IST
Updated : 05 Sep 2018 09:19 IST

பிரபுதேவா நடிப்பில் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் ‘தேள்’ படத்தின் படப்பிடிப்பு சென்னையில்  அக்டோபரில் தொடங்க உள்ளது. ‘தூத்துக்குடி’, ‘மதுரை சம்பவம்’ ஆகிய படங்களில் நாயகனாக நடித்தவரும், நடன இயக்குநருமான ஹரிகுமார் இப்படத்தை இயக்குகிறார். இது ஆக்சன் பின்னணியில் எமோஷன் கலந்த கமர்ஷியல் களமாக உருவாக உள்ளது. 

நாயகன், நாயகி, வில்லன், அம்மா ஆகிய 4 கதாபாத்திரங்கள் இடையே சுழலும் கதைப் பின்னணி என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. ‘தேள்’ கொட்டினால் விஷம். அந்த விஷம் யார் என்பதை நோக்கி திரைக்கதை அமைந்துள்ளதாகவும் தெரிகிறது. ‘எங்கேயும் எப்போதும்’ பட இசையமைப்பாளர் சி.சத்யா இப்படத்துக்கு இசையமைக்கிறார். நாயகி உள்ளிட்ட மற்ற கதாபாத்திரங்கள் யார் என்பது  விரைவில் முடிவு செய்யப்படுகிறது.

More In
This article is closed for comments.
Please Email the Editor