Published : 24 Aug 2018 02:28 PM
Last Updated : 24 Aug 2018 02:28 PM

பாலிவுட் படத்தில் அமலா பால்

அர்ஜுன் ராம்பால் ஜோடியாக பாலிவுட் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அமலா பால்.

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் என 4 தென்னிந்திய மொழிகளிலும் நடித்துவிட்டார் அமலா பால். அவர் நடிப்பில் கடைசியாக ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ படம் ரிலீஸானது. ‘முண்டாசுப்பட்டி’ ராம்குமார் இயக்கத்தில் விஷ்ணு விஷால் ஜோடியாக ‘ராட்ச்சசன்’ படத்தில் நடித்துள்ள அமலா பால், ஹீரோயினை மையப்படுத்திய ‘அதோ அந்த பறவை போல’ படத்தில் நடித்து வருகிறார். வினோத் கே.ஆர். இந்தப் படத்தை இயக்குகிறார்.

அத்துடன், பிருத்வி ராஜுடன் ‘ஆடு ஜீவிதம்’ என்ற மலையாளப் படத்திலும் நடித்து வருகிறார். இந்நிலையில், பாலிவுட் படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அமலா பால். நரேஷ் மல்ஹோத்ரா இயக்கும் இந்தப் படத்தில், பஞ்சாபிப் பெண்ணாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அர்ஜுன் ராம்பால் நடிக்கிறார்.

அக்டோபர் மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இமயமலையில் தொடங்க இருக்கிறது. இதனிடையே ‘மேயாத மான்’ ரத்னகுமார் இயக்கும் அடுத்த படத்திலும் ஒப்பந்தமாகியுள்ளார்.

‘அதோ அந்த பறவை போல’ படப்பிடிப்பில் விபத்து ஏற்பட்டு கையில் தற்போது ஓய்வில் இருக்கிறார் அமலா பால். ஆனாலும், காயத்துடனேயே வெள்ளத்தால் பாதிக்கப்பட்டத் தன் மாநில மக்களுக்குக் களத்தில் இறங்கி உதவி செய்து வருகிறார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x