Published : 18 Aug 2018 07:53 PM
Last Updated : 18 Aug 2018 07:53 PM

விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’: அக்டோபர் 5-ம் தேதி ரிலீஸ்

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘சீதக்காதி’, அக்டோபர் 5-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ படத்தை இயக்கிய பாலாஜி தரணீதரன், மறுபடியும் விஜய் சேதுபதியுடன் இணைந்துள்ள படம் ‘சீதக்காதி’. இந்தப் படத்தில் வயதான நாடக நடிகர் வேடத்தில் நடித்துள்ளார் விஜய் சேதுபதி. அவருடைய 25-வது படம் இது.

இயக்குநர் மகேந்திரன், பார்வதி, அர்ச்சனா, காயத்ரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அத்துடன், பாரதிராஜாவும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார். இயக்குநராகவே கெஸ்ட் ரோலில் அவர் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்.

ரம்யா நம்பீசனும் இந்தப் படத்தில் நடிகையாக கெஸ்ட் ரோலில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அப்பா - மகன் என முதன்முறையாக இந்தப் படத்தில் இரண்டு வேடங்களில் நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. பேசன் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.

இந்தப் படம், அக்டோபர் 5-ம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘செக்கச்சிவந்த வானம்’, 28-ம் தேதி ரிலீஸாகிறது. அதைத் தொடர்ந்து, அடுத்த வாரமே ‘சீதக்காதி’யும் ரிலீஸாக இருப்பதால், விஜய் சேதுபதி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x