Published : 15 Aug 2018 05:23 PM
Last Updated : 15 Aug 2018 05:23 PM

‘செக்கச்சிவந்த வானம்’ அப்டேட்: விஜய் சேதுபதி லுக் வெளியீடு

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகிவரும் ‘செக்கச்சிவந்த வானம்’ படத்தில் விஜய் சேதுபதியின் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது.

மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் படம் ‘செக்கச்சிவந்த வானம்’. மல்ட்டி ஸ்டாரர் படமான இதில் அரவிந்த் சாமி, சிம்பு, ஜோதிகா, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்‌ஷன்ஸ் இணைந்து இப்படத்தைத் தயாரித்து வருகின்றன. படத்தின் ஷூட்டிங் முடிந்து, இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. செப்டம்பர் 28-ம் தேதி படம் ரிலீஸாக இருக்கிறது. தெலுங்கில் இந்தப் படம் ‘நவாப்’ என்ற பெயரில் ரிலீஸாக இருக்கிறது.

இந்நிலையில், படத்தில் நடித்துள்ள ஒவ்வொருவரின் லுக்கும் வெளியிடப்பட்டு வருகிறது. 'வரதன்' என்ற கதாபாத்திரத்தில் அரவிந்த் சாமியும், ’தியாகு’ என்ற கதாபாத்திரத்தில் அருண் விஜய்யும் நடிக்கிறார்கள் என்று அறிவித்து இருவரின் லுக்கையும் வெளியிட்டது படக்குழு.

இன்று (ஆகஸ்ட் 15) விஜய் சேதுபதியின் லுக் வெளியாகியுள்ளது. இதில் அவருடைய கேரக்டர் பெயர் ‘ரசூல்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x