Published : 06 Aug 2018 05:09 PM
Last Updated : 06 Aug 2018 05:09 PM

ட்விட்டரில் இணைந்தார் நடிகர் சங்கத் தலைவர் நாசர்

நடிகர் சங்கத் தலைவரான நாசர், ட்விட்டரில் கணக்கு தொடங்கியுள்ளார்.

ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெரும்பாலானவர்கள் ஸ்மார்ட்போன் பயன்படுத்தத் தொடங்கிவிட்டதும், ஜியோவின் அதிரடிச் சலுகையும் இந்த அதிகரிப்புக்கு முக்கியக் காரணமாக இருக்கலாம்.

பிரபலங்கள், தங்களுடைய ரசிகர்களுடன் நேரடித் தொடர்பில் இருக்க இந்த சமூக வலைதளங்கள் உதவி செய்கின்றன. அதிலும் குறிப்பாக ஃபேஸ்புக்கைவிட ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராமில் தங்களைப் பற்றிய செய்திகள், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பிரபலங்கள் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த வரிசையில், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் தலைவரான நாசரும் இணைந்துள்ளார். இதுவரை அவருக்கென ட்விட்டரில் தனியாகக் கணக்கு இல்லை. அவருடைய மனைவி கமீலா நாசருக்கு ட்விட்டரில் கணக்கு இருந்தது. இந்நிலையில், நாசரும் அதிகாரபூர்வமாக ட்விட்டரில் இணைந்துள்ளார்.

அவருடைய ட்விட்டர் முகவரி @actornasser

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x