Published : 29 Jul 2018 09:24 AM
Last Updated : 29 Jul 2018 09:24 AM

திரை விமர்சனம்: மோகினி

ரெசிபி நிபுணரான த்ரிஷா சென்னையில் கேக் ஷாப் நடத்துகிறார். தோழியின் காதலுக்காக திடீரென சென்னையில் இருந்து அவர் லண்டனுக்கு செல்ல நேரிடுகிறது. விடாப்பிடியாக வீட்டில் சம்மதம் பெற்று, யோகிபாபு, ‘லொள்ளு சபா’ சுவாமிநாதன் ஆகியோருடன் லண்டன் புறப்படுகிறார். அங்கு மூவரும் தங்கியிருக்கும் வீட்டில் ஒரு அமானுஷ்ய சக்தி இருப்பது தெரியவருகிறது. ஒரு கட்டத்தில் அந்த சக்தி, த்ரிஷா உடலுக்குள் நுழைகிறது. அவரைப் போலவே உருவம் கொண்ட அந்த அமானுஷ்ய சக்தியின் பின்னணி என்ன? அது ஏன் த்ரிஷாவின் உடலுக்குள் நுழைய வேண்டும்? அதை த்ரிஷா எப்படி எதிர்கொள்கிறார்? இதுதான் ’மோகினி’யின் திகில் ஆட்டம்

பாழடைந்த பங்களா, இருள், மலைப் பின்னணி என வழக்கமான திகில் படங்களில் இருந்து விலகி, பரபரப்பான சென்னையில் ஒரு கேக் ஷாப், அடுத்தடுத்து லண்டன், அங்கே விரியும் அழகு என கொஞ்சம் வித்தியாசமான பேய் படம் தர முயன்றுள்ளார் இயக்குநர் மாதேஷ். லொக்கேஷன்கள் மாறினாலும், வழக்கமான அதே திகில் திரைக் கதை பார்முலா. இதனால், ஆரம்பம் முதலே படம் விறுவிறுப்பை இழக்கிறது.

திறமையான சமையல் கலை ஞர் என்பதில் தொடங்கி, லண்ட னில் தனக்குள் அமானுஷ்ய சக்தி நுழைந்து செய்யும் திகில் சம்பவம் வரை மிரட்டியிருக்கிறார் த்ரிஷா. ஆனால், அந்த நடிப்புக்கு பக்கபல மாக அவரைச் சுற்றி வலம் வரும் யோகிபாபு, சுவாமிநாதன், கணேஷ், மதுமிதா ஆகிய துணை கதாபாத்திரங் களின் பங்களிப்பும், காமெடியும் இல்லை.

வைஷ்ணவி, மோகினி என த்ரிஷாவின் இரண்டு கதாபாத்திர பின்னணியும், அதன் செயல்பாடுகளை பிரித்து உணர்த்துவதும் தெளிவாக கையாளப்பட்டுள்ளது. லண்டனின் தேம்ஸ் நதியில் தொலைக்கும் செயினை தேடும்போது வெண் சங்கு கிடைப்பது, த்ரிஷாவின் ஒரு துளி ரத்தம் நதியில் கலந்து அனுமாஷ்ய சக்தியாக உருமாறுவது உள்ளிட்ட சில இடங்கள் சுவாரசியம். அதேபோல, சிறுவர்களை அடைத்து வைத்து விற்பனை செய்யும் இடத்தை கண்டுபிடிக்கும் த்ரிஷாவின் சாதுர்ய மும், அதற்காக முன்னெடுக்கும் யோசனையும் சிறப்பு.

வீட்டுக்குள் பேய் இருப்பதாக அலறுபவர்கள் த்ரிஷாவை தேடுவதே இல்லை ஏன்? மோகினி வீட்டுக்குள் நுழைய முடியாதபடி தாயத்து வேலி போட்ட பிறகு, வீட்டுக்குள் இருப்பவர்களை அந்த சக்தி தாக்குவது எப்படி? மோகினி போலவே வைஷ்ணவி இருந்தும், வில்லன்களுக்கு சந்தேகம் வராதது ஏன்? எதிரிகளால் தாக்கப்பட்டு நதிக்குள் வீசப்படும் மோகினி, மற்றொரு சந்தர்ப்பத்தில் நதிக்குள் இறங்க முடியாதது ஏன்? இப்படி ஏகப்பட்ட லாஜிக் மீறல்கள். பேய் படத்துக்கு தேவையில்லைதான். அதற்காக இவ்வளவு அநியாயத் துக்கா?

படம் முழுக்க த்ரிஷாவுடன் பயணித்தாலும், யோகிபாபுவின் காமெடிகள் அவ்வளவாக ஒட்ட வில்லை. நாயகிக்கு ஒரு ஜோடி வேண்டும் என்பதற்காகவே த்ரிஷா வுக்கு காதலராக இந்தி நடிகர் ஜாக்கி பக்னானி. மற்றபடி, அவருக்கு வேலை எதுவும் இல்லை. வில்லன் முகேஷ் திவாரியின் நடிப்பு மற்ற பல படங்களை நினைவுபடுத்து கிறது.

படத்தின் பெரிய ஆறுதல்.. லண்டனை பசுமையாக காட்டியிருக் கும் ஆர்.ஜி.குருதேவ் ஒளிப்பதிவு. ‘வெளிநாடுகளில் படம் எடுக்கிறேன்’ என்று ஓரிரு காட்சிகளை எடுத்துவிட்டு, மிச்சத்துக்கு சென்னையில் செட் போடாமல், பெரும் பகுதியை லண்டனிலேயே காட்சிப்படுத்தியது, கண்ணுக்கு குளுமை.

மற்றொரு முக்கியமான ஆறுதல்.. த்ரிஷாவின் ஸ்வீட் அன் ஸ்மைலி நடிப்பு. ஆக்சன், கோபம், சோகம், மகிழ்ச்சி என எல்லா இடங்களிலும் ஸ்கோர் செய்கிறார்.

நரபலி, பாலியல் துன்புறுத்தல் உள்ளிட்ட விஷயங்களில் சிறுவர்கள் பாதிப்புக்கு உள்ளாவதை சமூகக் கருத்தோடு, பேய் கதை பின்னணி யில் தொட முயற்சித்தது பாராட்டுக் குரியது. புதுமையாக யோசித்திருந் தால், பழைய ‘ஜெகன்மோகினி’ போல இந்த மோகினியும் ஜொலித்திருப்பாள்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x