Published : 22 Jul 2018 03:52 PM
Last Updated : 22 Jul 2018 03:52 PM

சிபிராஜின் அடுத்தபடத் தலைப்பு ‘வட்டம்’

சிபிராஜ் நடிக்க இருக்கும் புதிய படத்துக்கு ‘வட்டம்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சிபிராஜ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ‘சத்யா’. பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கிய இந்தப் படத்தில் ஹீரோயினாக ரம்யா நம்பீசனும், முக்கிய வேடத்தில் வரலட்சுமி சரத்குமாரும் நடித்தனர். கடந்த வருடம் டிசம்பர் 8-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது.

இதைத் தொடர்ந்து ‘ரங்கா’ என்ற படத்தில் நடித்துள்ளார் சிபிராஜ். வினோத் என்ற அறிமுக இயக்குநர் இயக்கியுள்ள இந்தப் படத்தில், நிகிலா விமல் ஹீரோயினாக நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் சதீஷ் நடித்துள்ளார். அர்வி ஒளிப்பதிவு செய்ய, ராம்ஜீவன் இசையமைக்க, ரூபன் எடிட் செய்துள்ளார். இந்தப் படம் எப்போது ரிலீஸ் எனத் தெரியவில்லை.

இந்நிலையில், ‘மதுபானக்கடை’ கமலக்கண்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் சிபிராஜ். காதல் மற்றும் ஆக்‌ஷன் கலவையான இந்தப் படம், கோயம்புத்தூரைப் பின்னணியாகக் கொண்டு உருவாகிறது. 6 வருடங்களுக்குப் பிறகு கமலக்கண்ணன் இயக்கும் படம் இது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்துக்கு ‘வட்டம்’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.

இதுதவிர, ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்திலும் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறார் சிபிராஜ். டெக்னாலஜி த்ரில்லரை அடிப்படையாக வைத்து இந்தப் படத்தின் கதை எழுதப்பட்டுள்ளது.

'காஷ்மோரா' படத்தில் நடிக்க விரும்பினேன்: விஜய் சேதுபதி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x