Published : 20 Jul 2018 08:45 PM
Last Updated : 20 Jul 2018 08:45 PM

மதுரையில் சிவகார்த்திகேயனின் ‘சீம ராஜா’ இசை வெளியீடு

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘சீம ராஜா’ படத்தின் இசை வெளியீட்டு விழா, மதுரையில் நடைபெற இருக்கிறது.

பொன்ராம் இயக்கத்தில் மூன்றாவது முறையாக சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘சீம ராஜா’. ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ மற்றும் ‘ரஜினி முருகன்’ படங்களைத் தொடர்ந்து இருவரும் இணைந்துள்ளதால், இந்தப் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகம் இருக்கிறது.

சிவகார்த்திகேயன் ஜோடியாக சமந்தா நடித்துள்ள இந்தப் படத்தில், கீர்த்தி சுரேஷ் சிறப்புத் தோற்றத்தில் நடித்துள்ளார். சூரி, நெப்போலியன், சிம்ரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

டி.இமான் இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, யுகபாரதி பாடல்கள் எழுதியுள்ளார். இந்தப் படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா, மதுரையில் நடைபெற இருக்கிறது. ஆகஸ்ட் 3-ம் தேதி பிரமாண்டமாக இந்த விழாவை நடத்த இருக்கின்றனர்.

அதற்கு முன்னதாக, ‘வாரான் வாரான் சீம ராஜா’ என்ற பாடலை, இம்மாதம் (ஜூலை) 25-ம் தேதி வெளியிட இருக்கின்றனர். இந்தப் பாடலை ‘சூப்பர் சிங்கர்’ திவாகர் பாடியுள்ளார்.

ஆயுத பூஜையை முன்னிட்டு செப்டம்பர் 13-ம் தேதி உலகம் முழுவதும் ‘சீம ராஜா’ வெளியாக இருக்கிறது.

'காஷ்மோரா' படத்தில் நடிக்க விரும்பினேன்: விஜய் சேதுபதி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x