Published : 17 Jul 2018 12:22 PM
Last Updated : 17 Jul 2018 12:22 PM

‘கோலமாவு கோகிலா’ மூலம் திரையுலகிற்கு வரும் பிஜிலி ரமேஷ்

‘கோலமாவு கோகிலா’ படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகவுள்ளார் ரஜினி ரசிகர் பிஜிலி ரமேஷ்.

சமீபத்தில் சமூகவலைத்தளம் மூலமாக மிகப்பிரபலமாக வலம் வருபவர் பிஜிலி ரமேஷ். இவர் அளித்த பல பேட்டிகள் பெரும் வைரலாக உருவெடுத்ததின் மூலம், பிரபலமாக உருவானார். இவரை வைத்து ஷோரூம் எல்லாம் சென்னையில் திறந்திருக்கிறார்கள்.

பிஜிலி ரமேஷின் பிரபலத்தை ‘கோலமாவு கோகிலா’ படக்குழு உபயோகப்படுத்தி இருக்கிறது. ஆகஸ்ட் 10-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்திற்காக விளம்பரப் பாடல் ஒன்றை உருவாக்கியுள்ளது படக்குழு.

'Kabiskabaa' என்று பெயரிடப்பட்டுள்ள இப்பாடல் ஜுலை 19-ம் தேதி வெளியாகவுள்ளது. இதில் பிஜிலி ரமேஷ் நடித்திருக்கிறார். இதற்கான சிறு அறிமுக வடிவத்தை இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.

ஆகஸ்ட் 10-ம் தேதி கமலின் ‘விஸ்வரூபம் 2’ படத்துடன் போட்டியிடவுள்ளது ‘கோலமாவு கோகிலா’ என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x