Published : 17 Jul 2018 11:44 AM
Last Updated : 17 Jul 2018 11:44 AM

சிவகார்த்திகேயனின் ‘சீம ராஜா’வில் அறிமுகமாகும் ‘சூப்பர் சிங்கர் 6’ செந்தில் கணேஷ்

சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘சீம ராஜா’ படத்தில் பின்னணிப் பாடகராக அறிமுகமாகிறார் ‘சூப்பர் சிங்கர் 6’ பட்டத்தை வென்ற செந்தில் கணேஷ்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சூப்பர் சிங்கர் 6’ நிகழ்ச்சியின் இறுதிப்போட்டி, கடந்த ஞாயிற்றுக்கிழமை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. மாளவிகா, ஸ்ரீகாந்த், அனிருத், ரக்‌ஷிதா, செந்தில் கணேஷ், ஷக்தி என 6 போட்டியாளர்கள் பங்கேற்ற இந்த நிகழ்ச்சியில், செந்தில் கணேஷ் ‘சூப்பர் சிங்கர் 6’ பட்டத்தை வென்றார். அவருக்கு 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டதுடன், ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

இந்நிலையில், செந்தில் கணேஷை முதன்முதலில் பின்னணிப் பாடகராக அறிமுகப்படுத்தப் போவதாக அறிவித்துள்ளார் இசையமைப்பாளர் டி.இமான். யுகபாரதி இந்தப் பாடலை எழுதியுள்ளார். ஏற்கெனவே ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சிய பல போட்டியாளர்களைத் தன்னுடைய இசையமைப்பில் பாடவைத்து பின்னணிப் பாடகராக்கியிருக்கிறார் டி.இமான். வேறுசில பாடகர்களும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தாலும், அதிகமானோருக்கு வாய்ப்பு கொடுத்த பெருமை டி.இமானையே சேரும்.

பொன்ராம் இயக்கியுள்ள ‘சீம ராஜா’ படத்தில், சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சமந்தா நடிக்க, கெஸ்ட் ரோலில் கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். சிம்ரன், சூரி, நெப்போலியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். 24 ஏஎம் ஸ்டுடியோஸ் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார்.

படத்தின் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு செப்டம்பர் 13-ம் தேதி உலகம் முழுவதும் இந்தப் படம் ரிலீஸாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x