Published : 10 Jul 2018 12:57 PM
Last Updated : 10 Jul 2018 12:57 PM

அக்டோபர் 18-ம் தேதி விஷாலின் ‘சண்டக்கோழி 2’ ரிலீஸ்

விஷால் நடித்துள்ள ‘சண்டக்கோழி 2’, அக்டோபர் 18-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சண்டக்கோழி 2’. லிங்குசாமி இயக்கியுள்ள இந்தப் படத்தில், விஷால் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். 2005-ம் ஆண்டு ரிலீஸான ‘சண்டக்கோழி’ படத்தின் தொடர்ச்சியாக இந்தப் படம் உருவாகியுள்ளது.

வரலட்சுமி சரத்குமார், ராஜ்கிரண், கஞ்சா கருப்பு, ராம்தாஸ், ஹரீஷ் பெராடி, ‘கபாலி’ விஸ்வந்த், ‘அப்பாணி’ சரத், ஷண்முகராஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படத்தில், முதல் பாகத்தில் ஹீரோயினாக நடித்துள்ள மீரா ஜாஸ்மின் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

கே.ஏ.சக்திவேல் ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி மற்றும் பென் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை, லைகா புரொடக்‌ஷன்ஸ் வெளியிடுகிறது. இந்தப் படம், அக்டோபர் மாதம் 18-ம் தேதி ரிலீஸாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமாக ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை தான் படங்கள் வெளியாகும். பண்டிகை நாட்கள் போன்ற சிறப்பு தினங்கள் அல்லது பெரிய பட்ஜெட் படங்கள் வெளியாகும்போது மட்டும் ஓரிரு நாட்கள் முன்னதாகவே வெளியிடப்படும். அதன்படி, இந்தப் படமும் வியாழக்கிழமையே ரிலீஸாகிறது. அதேபோல், வருகிற வியாழக்கிழமை ‘தமிழ்ப்படம் 2’ ரிலீஸாகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x