Published : 10 Jul 2018 12:56 PM
Last Updated : 10 Jul 2018 12:56 PM

சிம்புவின் அரசியல் படம் ‘மாநாடு’

சிம்பு நடிக்கும் அரசியல் படத்துக்கு ‘மாநாடு’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘பார்ட்டி’. ஜெய், ஷாம், சிவா, சத்யராஜ், ஜெயராம், சந்திரன், நாசர், சுரேஷ், ரம்யா கிருஷ்ணன், ரெஜினா, சஞ்சிதா ஷெட்டி, நிவேதா பெத்துராஜ் என மிகப்பெரிய நட்சத்திரக் கூட்டம் இந்தப் படத்தில் நடித்துள்ளது. பிஜி தீவில் இந்தப் படம் படமாக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து சிம்பு நடிப்பில் ஒரு படத்தை இயக்குகிறார் வெங்கட் பிரபு. அரசியலை மையமாகக் கொண்ட இந்தப் படத்துக்கு ‘மாநாடு’ எனத் தலைப்பு வைத்துள்ளனர். வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

இந்தப் படத்தில் சிம்பு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார், இல்லையில்லை, ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கிறார் என இரண்டு விதமான தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால், படத்தின் கதையை எழுதி முடித்தபிறகே நடிகை குறித்து முடிவு செய்யப்படும் என வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.

‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்துக்குப் பிறகு சிம்பு ஹீரோவாக நடிக்கும் படம் இது. இதற்கிடையில் மணிரத்னம் இயக்கத்தில் மல்ட்டி ஸ்டாரர் படமான ‘செக்கச் சிவந்த வானம்’ படத்தில் நடித்துள்ளார் சிம்பு. அரவிந்த் சாமி, விஜய் சேதுபதி, அருண் விஜய், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ராவ், பிரகாஷ் ராஜ் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x