Published : 09 Jul 2018 05:16 PM
Last Updated : 09 Jul 2018 05:16 PM

இந்தியில் ரீமேக் ஆகிறது ‘வேட்டை’

மாதவன், ஆர்யா நடிப்பில் வெளியான ‘வேட்டை’ படம், இந்தியில் ரீமேக் செய்யப்பட இருக்கிறது.

லிங்குசாமி இயக்கத்தில் 2012-ம் ஆண்டு வெளியான படம் ‘வேட்டை’. மாதவன், ஆர்யா என இரண்டு ஹீரோக்கள் இணைந்து நடித்த இந்தப் படத்தில், மாதவனுக்கு ஜோடியாக சமீரா ரெட்டியும், ஆர்யாவுக்கு ஜோடியாக அமலா பாலும் நடித்தனர். நாசர், தம்பி ராமையா, சவுந்தர ராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்தனர்.

லிங்குசாமி கதை, திரைக்கதை எழுதிய இந்தப் படத்துக்கு, பிருந்தா சாரதி வசனம் எழுதினார். நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைத்தார். இந்தப் படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களையும் நா.முத்துக்குமார் எழுதினார்.

திருப்பதி பிரதர்ஸ் மற்றும் யுடிவி மோஷன் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்த இந்தப் படத்தை, யுடிவி மோஷன் பிக்சர்ஸ் மற்றும் வேந்தர் மூவிஸ் இணைந்து வெளியிட்டன. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இந்தப் படம், தெலுங்கில் 2013-ம் ஆண்டும், பெங்காலியில் 2014-ம் ஆண்டும் ரீமேக் செய்து வெளியிடப்பட்டது.

அத்துடன், ஒடிய மொழியிலும் ரீமேக் செய்யப்பட்டு, இந்த வருடத்தின் தொடக்கத்தில் வெளியானது. ஷாகித் கபூர், கரண் ஜோஹர் நடிப்பில் இந்தப் படத்தை இந்தியில் ரீமேக் செய்யவும் திட்டமிடப்பட்டது. ஆனால், அது தள்ளிக்கொண்டே போனது.

இந்நிலையில், ‘வேட்டை’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையை சஜித் நதியத்வாலா பெற்றுள்ளார். நடிகர் - நடிகைகள் குறித்த விவரங்கள் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x