Last Updated : 30 Jun, 2018 09:42 AM

 

Published : 30 Jun 2018 09:42 AM
Last Updated : 30 Jun 2018 09:42 AM

டிவி சீரியல் தயாரிப்பது வீட்டு விசேஷம் போன்றது: ‘றெக்க கட்டி பறக்கும் மனசு’ நாயகி சமீரா ஷெரிஃப் நேர்காணல்

ஹை

தராபாத்துல வளர்ந்த பெண். இவ்ளோ சீக்கிரம் தமிழ் பேசக் கத்துக்கிட்டு, இங்கே ஒரு சீரியலும் தயாரிச்சு, நாயகியா நடிச்சு பேர் வாங்கியிருக்கியே. நீ சமத்துதான் என்று பல பெரியவங்ககிட்ட வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் வாங்கி குவிச்சிட்டிருக்கேன்.. என்று குதூகலிக்கிறார் ‘றெக்க கட்டி பறக்கும்மனசு’ நெடுந்தொடரில் நடிக்கும் சமீரா ஷெரிஃப்.ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகிவரும் இந்தத் தொடர் தற்போது 250 அத்தியாயங்களைக் கடந்து பரபரப்பு கூடியிருக்கிறது. தொடர்ந்து அவருடன் பேசியதில் இருந்து..

சினிமா போலவே சின்னத்திரையிலும் நடிகர், நடிகைகள் சொந்த மாக தயாரித்து நடிப் பது அதிகரித்து வருகிறதே?

ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘டான்ஸ் ஜோடி டான்ஸ்’ முதல் சீசனின் இறுதிப்போட்டி நிகழ்ச்சியை தயாரிக்கும் வாய்ப்பு எங்களது ஆரஞ்ச் மீடியா நிறுவனத்துக்கு கிடைத்தது. அந்த அனுபவம்தான் ‘றெக்க கட்டி பறக்கும் மனசு’ தொடரை தயாரிக்கும் வாய்ப்பைத் தந்தது. ஆரம்பத்தில் ஒரு மராத்தி தொடரை ரீமேக் செய்யலாம்னுதான் இறங்கினோம். ரெண்டு, மூணாவது வாரத்திலேயே அது நம்ம கலாச்சார களத் துல இருந்து விலகுற மாதிரி இருந்தது. உடனே, ஜல்லிக்கட்டு, காதல், வீரம்னு நம்ம மண் சார்ந்த விஷயத்துக்குள்ள ஓடி வந்துட்டோம். இப்போ 250 அத்தியாயங்களைக் கடந்து வெற்றிகரமாக போய்ட்டிருக்கு.

தயாரிப்பாளர், நடிகைன்னு ரெண்டு பொறுப்புகளோடு இருப்பது வித்தியாசமான அனுபவம். நம்ம வீட்ல ஒரு கல்யாணம் நடக்கும்போது, எல்லாத்துக்கும் கான்ட்ராக்ட் ஏற்பாடு பண்ணி செய்வது ஒரு அனுபவம். நாமே எல்லா காரியங்களையும் எடுத்துப் போட்டு பார்ப்பது ஒரு சுகம். அதுபோலத்தான், என் சீரியல் வேலைகளைப் பார்ப்பது, எங்க வீட்டு கல்யாண வேலைகளை நாங்களே இழுத்துப் போட்டுக்கிட்டு பார்ப்பதுபோல தோணுது.

தயாரிப்பாளரே நடிப்புக் குழுவில் ஒருவராக இருக்கும்போது நிறைய கட்டுப்பாடுகள் இருக்குமே?

அதெல்லாம் எதுவுமே இல்லை. மேக்கப் போட்டுட்டு கேமராவுக்கு முன்னாடி போய்ட்டா, தயாரிப்பாளர் என்பதெல்லாம் மறந்துடுவேன். சம்பளம் வாங்குற நடிகை என்ன செய்யணுமோ, அதை செய்வேன். மற்றவங்க ஷூட்டிங் ஸ்பாட்ல என்னெல்லாம் எதிர்பார்ப்பாங்களோ அதெல்லாம் சரியா இருக்கணும்னு விரும்புவேன். எங்கள் ஷூட்டிங் ஸ்பாட் எப்பவுமே மகிழ்ச்சியா, கூட்டுக் குடும்பம் மாதிரி இருக்கும். இங்கே கலகலப்பு மட்டும்தான்.. நோ கட்டுப்பாடு!

இந்த ஒரு சீரியலில் மட்டும்தான் முகம் காட்டுகிறீர்கள் போல?

ஆமாம். அம்மா, அப்பா எல்லோரும் ஹைதராபாத்தில் இருக்காங்க. சீரி யல் ஷூட்டிங் வேலைன்னு வந்ததால குடும்ப விஷயங்கள், வேலைகளை கவனிக்காம இருக்க முடியாது. எனக்கு மாசத்துல சில நாட்கள் குடும்பத்தோட இருந்தே ஆகணும். அதனால இப்போதைக்கு இந்த ஒரு சீரியல் போதும்னு இருக்கேன். சீக்கிரமே இன்னொரு சீரியல்ல முகம் காட்டப்போறேன். விரைவில் அந்த அறிவிப்பு இருக்கும்.

ராதிகா, ரம்யா கிருஷ்ணன், இப்போ நீலிமா ராணி வரைக்கும் சீரியல் தயாரிப்பாளராக ஒரு இடத்தை பிடித்திருக்கிறார்கள். உங்கள் எல்லை என்ன?

சின்ன வயசுல ராதிகாவின் ‘சித்தி’, ‘அண்ணாமலை’ போன்ற தொடர்களைப் பார்த்து வளர்ந்த பெண் நான். ஒரு தயாரிப்பாளராக அவங்களோட ஒப்பிட்டுக்கொள்கிற நிலை வந்ததையே பெருமையா எடுத்துக்கிறேன்.

நடிப்பது ஒரு மகிழ்ச்சி. அதுவும், சொந்த கம்பெனியிலயே நடிப்பது அந்த மகிழ்ச்சியை இரட்டிப்பாக்குது. நல்ல விஷயம்னு மனசுக்கு படும்போது தொடர்ந்து அதை செய்யலாம்தானே. கண்டிப்பா நானும் தொடர்வேன்.

காதலர்கள் அன்வர் - சமீரா ஷெரிஃப் திருமணம் எப்போது?

இந்த ஆண்டு இறுதிக்குள் இருக்கலாம். அவரும் தமிழ், தெலுங்குல சீரியல் நடிப்பு, தயாரிப்புன்னு பிஸியா ஓடிக்கிட்டிருக்கார். ரெண்டு பேரும் கொஞ்சம் ரிலாக்ஸா ஒருநாள் உட்கார்ந்து பேசணும். அந்த நாள் சீக்கிரமே அமையும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x