Published : 23 Jun 2018 02:13 PM
Last Updated : 23 Jun 2018 02:13 PM

விக்ரம் படத்துக்கு இசையமைக்கிறார் ஜிப்ரான்

கமல்ஹாசன் தயாரிப்பில் விக்ரம் நடிக்கும் படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

கமல்ஹாசனுக்குச் சொந்தமான தயாரிப்பு நிறுவனம் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல். பெரும்பாலும் கமல்ஹாசன் நடித்த படங்களையே தயாரித்துவந்த இந்த நிறுவனம், இதுவரை ‘கடமை கண்ணியம் கட்டுப்பாடு’, ‘மகளிர் மட்டும்’ மற்றும் ‘நளதமயந்தி’ ஆகிய 3 படங்களை மட்டுமே பிற நடிகர்களின் நடிப்பில் தயாரித்துள்ளது.

இந்நிலையில், விக்ரம் நடிக்க இருக்கும் ஒரு படத்தைத் தயாரிக்கிறது ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இண்டர்நேஷனல். ‘தூங்காவனம்’ படத்தின் இயக்குநரான ராஜேஷ் எம் செல்வா இந்தப் படத்தை இயக்குகிறார். கதாநாயகியாக அக்‌ஷரா ஹாசன் நடிக்கிறார்.

இந்தப் படத்தின் இசையமைப்பாளராக ஜிப்ரான் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ‘உத்தம வில்லன்’, ‘பாபநாசம்’, ‘தூங்காவனம்’, ‘விஸ்வரூபம் 2’ என இதுவரை கமல்ஹாசன் நடித்த 4 படங்களுக்கு இசையமைத்திருக்கிறார் ஜிப்ரான். இந்நிலையில், 5-வது முறையாக கமல்ஹாசனுடன் இணைந்துள்ளார் ஜிப்ரான்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x