Published : 22 Jun 2018 12:25 PM
Last Updated : 22 Jun 2018 12:25 PM

நடிகர் விஜய்க்கு இன்று பிறந்தநாள்: தமிழகம் முழுவதும் ரசிகர்கள் கொண்டாட்டம்; புது படத்துக்கு ‘சர்கார்’ என பெயர் அறிவிப்பு

நடிகர் விஜய் தனது 44-வது பிறந்த நாளை இன்று கொண்டாடும் நிலையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்து வரும் புதிய படத்துக்கு ‘சர்கார்’ என்ற பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் ஆண்டுதோறும் தனது பிறந்தநாளன்று தனது ரசிகர் மன்றமான ‘விஜய் மக்கள் இயக்கம்’ வாயிலாக பல நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார். ரஜினி, கமல் அரசியல் பிரவேசத்துக்கு முன்பே தனது அரசியல் ஈடுபாட்டை வெளிப்படையாக அறிவித்தவர். அரியலூர் மாணவி அனிதா மரணம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவங்களின்போது, நேரில் சென்று பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததோடு, உதவிகளையும் வழங்கினார்.

இந்நிலையில், விஜய் தனது 44-வது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார். இதையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்துள்ளனர். நலத்திட்ட உதவிகளையும் வழங்குகின்றனர். இதுமட்டுமின்றி, முன்பு இல்லாத அளவுக்கு, ‘போக்கிரி’ ‘தலைவா’, ‘மெர்சல்’ உள்ளிட்ட அவரது பல திரைப்படங்கள் இன்று சிறப்புக் காட்சிகளாக திரையிடப்படுகின்றன.

இதற்கிடையில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படத்துக்கு ‘சர்கார்’ என்று பெயரிடப்பட்டுள்ளதாக நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு முடிந்துள்ளது. பாடல் உட்பட சில காட்சிகள் முடிந்ததும், ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x