Published : 04 May 2018 02:03 PM
Last Updated : 04 May 2018 02:03 PM

‘நீட் தேர்வு, மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி’ - இயக்குநர் பா.இரஞ்சித்

‘நீட் தேர்வு, மாணவர்கள் மேல் நிகழ்த்தப்படும் அநீதி’ எனத் தெரிவித்துள்ளார் இயக்குநர் பா.இரஞ்சித்.

மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத்தேர்வு, நாளை மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற இருக்கிறது. தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு ராஜஸ்தான் மற்றும் கேரளாவில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. திடீரென இப்படி அறிவிக்கப்பட்டுள்ளதால், மாணவர்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

வெளிமாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி, சமூக அக்கறையுள்ள பலரும் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குநர் பா.இரஞ்சித்தும் தன்னுடைய எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

“நீட் தேர்வு, மாணவர்கள் மேல் நிகழ்த்தப்படும் அநீதி. நீட் ரத்து செய்யப்பட வேண்டும் என்று கோரிவந்த மாணவர்கள், இன்று எங்கள் மாநிலத்துக்குள்ளேயே தேர்வெழுத அனுமதியுங்கள் என்று கெஞ்சும் நிலைக்குப் போனதற்கு காரணம் மத்திய அரசும், அதன் நிழல் போல இருக்கும் மாநில அரசும் தான்” என ட்விட்டரில் தெரிவித்துள்ளார் பா.இரஞ்சித்.

தமிழக மாணவர்கள் வெளிமாநிலங்களுக்குச் சென்று தேர்வெழுத, பலரும் உதவி செய்ய முன்வந்துள்ளனர் என்பது ஆறுதலான விஷயம்.

 

இதை மிஸ் பண்ணிடாதீங்க...

நீட் தேர்வு எழுதும் 2 மாணவர்களின் போக்குவரத்துச் செலவை ஏற்பதாக நடிகர் பிரசன்னா அறிவிப்பு

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x