Published : 30 Apr 2018 02:34 PM
Last Updated : 30 Apr 2018 02:34 PM

தியேட்டரில் ரிலீஸ் இல்லை: நேரடியாக ஆன்லைனில் வெளியாகிறது ‘சில சமயங்களில்’

‘சில சமயங்களில்’ என்ற தமிழ்ப் படம், தியேட்டரில் ரிலீஸாகாமல் நேரடியாக ஆன்லைனில் ரிலீஸாக இருக்கிறது.

பிரியதர்ஷன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘சில சமயங்களில்’. பிரகாஷ் ராஜ், அசோக் செல்வன், ஸ்ரேயா ரெட்டி ஆகியோர் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ள இந்தப் படத்துக்கு, சமீர் தாஹிர் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ஐசரி கணேஷ், இயக்குநர் விஜய் மற்றும் பிரபுதேவா இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளனர். இந்தப் படத்தைத் தியேட்டரில் ரிலீஸ் செய்யாமல், நேரடியாக நெட் ஃபிளிக்ஸ் இணையதளத்தில் வெளியிடுகின்றனர். இதன்மூலம் பரவலான மக்களைச் சென்றடைய முடியும் என அவர்கள் நம்புகின்றனர். நாளை (மே 1) நெட் ஃபிளிக்ஸில் இந்தப் படம் ரிலீஸாக இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x