Published : 30 Apr 2018 12:29 PM
Last Updated : 30 Apr 2018 12:29 PM

வைல்ட் லைஃப் போட்டோகிராபராக நடிக்கும் ஆன்ட்ரியா

‘கா’ படத்தில் வைல்ட் லைஃப் போட்டோகிராபராக நடிக்கிறார் ஆன்ட்ரியா.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி நாஞ்சில் இயக்கும் படம் ‘கா’. காட்டை மையப்படுத்தி எடுக்கப்படும் இந்தப் படத்தில், வைல்ட் லைஃப் போட்டோகிராபராக ஆன்ட்ரியா நடிக்கிறார். கொடிய மிருகங்கள் வாழும் காட்டுப் பகுதிக்குச் சென்று, அவற்றின் வாழ்க்கை முறையைப் படம்பிடிப்பது தான் அவரின் பொழுதுபோக்கு.

க்ரைம் த்ரில்லரான இந்தப் படம், ஹீரோயினை முன்னிலைப்படுத்தி உருவாக இருக்கிறது. முக்கிய வேடங்களில் இளவரசு மற்றும் சலீம் கவுஸ் இருவரும் நடிக்கின்றனர். அந்தமான், மூணார் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் இதன் ஷூட்டிங் நடைபெற இருக்கிறது. ஷாலோம் ஸ்டுடியோஸ் நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது.

கமல்ஹாசனுடன் ஆன்ட்ரியா நடித்த ‘விஸ்வரூபம் 2’ ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷுடன் ‘வடசென்னை’ படத்தில் தற்போது நடித்து வருகிறார் ஆன்ட்ரியா.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x