Last Updated : 13 Feb, 2018 11:53 AM

 

Published : 13 Feb 2018 11:53 AM
Last Updated : 13 Feb 2018 11:53 AM

யூ-டியூப் தளத்தில் விஜய்யின் தெறி பட இந்தி டப்பிங் சாதனை

யூ-டியூப் தளத்தில் இந்தியில் டப்பிங் செய்யப்பட்ட தமிழ் படங்களில் விஜய் நடிப்பில் வெளியான 'தெறி' சாதனை படைத்தது.

சமூக வலைதளங்களில் அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர்களில் முக்கியமானவர் விஜய். அவருடைய படத்தின் டீஸர் மற்றும் ட்ரெய்லர் வெளியாகும் போது, சமூக வலைதளத்தில் வைரலாக அனைவராலும் பகிரப்படும். தற்போது இந்தியில் டப்பிங் செய்யப்பட்டு வெளியான'தெறி' திரைப்படம் யூ-டியூப் தளத்தில் சாதனை புரிந்திருக்கிறது.

இப்படத்தைச் சுமார் 5 கோடி பேர் கண்டு ரசித்திருக்கிறார்கள். இதுவரை எந்தவொரு இந்தி டப்பிங் செய்யப்பட்ட தமிழ் படமும் இச்சாதனையை நிகழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, ஏமி ஜாக்சன், இயக்குநர் மகேந்திரன், ராதிகா சரத்குமார் உள்ளிட்ட பலர் நடிக்க, தாணு தயாரித்திருந்தார். விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய். கீர்த்தி சுரேஷ், யோகி பாபு உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்து வரும் இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது கொல்கத்தாவில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x