Published : 05 Feb 2018 07:18 PM
Last Updated : 05 Feb 2018 07:18 PM

ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா

ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகவுள்ள புதிய படத்தில் ஜீவா நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

'குக்கூ' மற்றும் 'ஜோக்கர்' ஆகிய படங்களின் மூலம் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இயக்குநர் ராஜுமுருகன். தனது அடுத்த படத்திற்காக கதையொன்றை எழுதி வந்தார். ஒலிம்பியா மூவிஸ் இப்படத்தை தயாரிக்க முன்வந்தது.

தற்போது ஜீவா நாயகனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். விரைவில் இதர நடிகர் - நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் முடிவு செய்து அறிவிக்கப்பட உள்ளனர். இப்படத்தின் தலைப்பு நாளை (பிப்ரவரி 6) அறிவிக்கப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

முன்னதாக, பாலா இயக்கவுள்ள 'வர்மா' படத்திற்கும் வசனம் எழுதியுள்ளார். தற்போது ஜீவா நடிக்கவுள்ள படத்தின் முதற்கட்டப் பணிகளில் கவனம் செலுத்தி வருகிறார் ராஜுமுருகன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x