Last Updated : 31 Jan, 2017 05:47 PM

 

Published : 31 Jan 2017 05:47 PM
Last Updated : 31 Jan 2017 05:47 PM

விஜய் - அட்லீ பட அப்டேட்: திரைக்கதை அமைத்துள்ள பாகுபலி கதாசிரியர்

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படத்துக்கு திரைக்கதை அமைத்துள்ளார் 'பாகுபலி' கதாசிரியர் விஜயேந்திர பிரசாத்.

'பைரவா' படத்தைத் தொடர்ந்து, அட்லீ இயக்கத்தில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் விஜய். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பிப்ரவரி 1ம் தேதி முதல் தொடங்கவுள்ளது.

சத்யராஜ், வடிவேலு, ஜோதிகா, காஜல் அகர்வால், சமந்தா, எஸ்.ஜே.சூர்யா, கோவை சரளா, சத்யன் ஆகியோர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள். .ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராகவும், ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவாளராகவும், ஆண்டனி ரூபன் எடிட்டராகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்கள்.

இப்படத்தின் கதை, வசனம் அட்லீ எழுத, திரைக்கதை அமைத்துள்ளார் 'பாகுபலி' கதாசிரியர் விஜயேந்திர பிரசாத். இவர் இயக்குநர் ராஜமெளலியின் தந்தையாவார். சென்னை படப்பிடிப்பைத் தொடர்ந்து வட இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு நடத்த படக்குழு முடிவு செய்துள்ளது.

தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் 100வது படமாக இப்படம் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x