Published : 16 May 2016 08:30 PM
Last Updated : 16 May 2016 08:30 PM

வாக்களிக்காத திரையுலக பிரபலங்கள்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ஏ.ஆர்.ரஹ்மான், சூர்யா, விக்ரம், சமந்தா, இளையராஜா, தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், இயக்குநர் மணிரத்னம், விக்ரம் பிரபு ஆகிய முன்னணி திரையுலகினர் வாக்களிக்கவில்லை.

* '24' படத்தின் ப்ரிமீயர் காட்சிக்கு தனது குடும்பத்துடன் அமெரிக்கா சென்றார் சூர்யா. அவரால் திட்டமிட்டபடி சென்னை திரும்ப முடியவில்லை. இது குறித்து சூர்யா வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் "மே-16 அன்று தமிழக சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று மக்களிடம் வேண்டுகோள் வைத்திருந்தேன். அனைவரையும் வாக்களிக்கும்படி வலியுறுத்திவிட்டு, என்னால் செய்ய முடியாமல் போனதற்காக அனைவரிடமும் மீண்டும் ஒருமுறை மனப்பூர்வமான மன்னிப்பை கேட்டுக் கொள்கிறேன்” என்று தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்.

* தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா தனுஷ் இருவரும் திருமணத்திற்கு பிறகு 5 முறை வீடு மாறியிருப்பதால் எங்கு ஓட்டு இருப்பது குறித்து தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதினார்கள். இச்சர்ச்சையால் இருவரும் வாக்களிக்கவில்லை.

* விக்ரம் பிரபு, ஏ.ஆர்.ரஹ்மான் இருவரும் வெளிநாட்டில் இருந்ததால் வாக்களிக்கவில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x