Last Updated : 09 Jul, 2017 04:56 PM

 

Published : 09 Jul 2017 04:56 PM
Last Updated : 09 Jul 2017 04:56 PM

ராணா - காஜல் அகர்வால் இணையும் நான் ஆணையிட்டால்

ராணா மற்றும் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகிவரும் படத்துக்கு 'நான் ஆணையிட்டால்' என பெயரிட்டுள்ளார்கள்.

தேஜா இயக்கத்தில் தெலுங்கில் உருவாகியுள்ள படம் 'நேனே ராஜூ நேனே மந்திரி'. ராணா, காஜல் அகர்வால், கத்ரீன் தெரசா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை சுரேஷ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது.

சமீபத்தில் இப்படத்தின் டீஸர் மற்றும் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இதற்கு தெலுங்கு திரையுலக பிரபலங்கள் பலரும் சமூகவலைத்தளத்தில் ராணாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள். 'பாகுபலி' படத்தைத் தொடர்ந்து ராணா நடிப்பில் வெளியாகவுள்ள படம் என்பதால், இதற்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தற்போது தமிழிலும் இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். அதற்கு 'நான் ஆணையிட்டால்' என பெயரிட்டுள்ளார்கள். அதன் ட்ரெய்லரையும் வெளியிட்டுள்ளார்கள். விரைவில் இசை வெளியீட்டு விழாவையும் நடத்த திட்டமிட்டுள்ளது படக்குழு.

'நான் ஆணையிட்டால்' படத்தின் ட்ரெய்லர்