Last Updated : 06 Oct, 2016 07:02 PM

 

Published : 06 Oct 2016 07:02 PM
Last Updated : 06 Oct 2016 07:02 PM

மீண்டும் இணையும் விஜய் - ஏ.ஆர்.ரஹ்மான் கூட்டணி?

அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாக இருக்கும் படத்தின் இசைக்கு ஏ.ஆர்.ரஹ்மானுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'அழகிய தமிழ் மகன்'. அதற்குப் பிறகு வெளியான விஜய் படம் எதற்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவில்லை.

இந்நிலையில் 'பைரவா' படத்தைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் உருவாகும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கி இருக்கிறார். தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. இதற்கான முதற்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

இப்படத்தின் இசைக்காக ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறது படக்குழு. இது குறித்து "ஏ.ஆர்.ரஹ்மானுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறோம். இன்னும் ஒரிரு வாரங்களில் முடிவு என்ன என்பது தெரிந்துவிடும்" என்று படக்குழுவினர் ஒருவர் தெரிவித்தார்.

இப்படத்தின் படப்பிடிப்பு அடுத்தாண்டு துவக்கத்தில் துவங்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x