Published : 31 Jan 2017 11:00 AM
Last Updated : 31 Jan 2017 11:00 AM

நடிகரை இயக்குநர் ரசிக்க வேண்டும்: பி.வாசு நேர்காணல்

நீண்ட நாட்களுக்கு பிறகு ‘சிவலிங்கா’ படத்தின் மூலம் மீண்டும் தமிழ் திரையுலகுக்கு வருகிறார் இயக்குநர் பி.வாசு. படத்தின் இறுதிக்கட்டப் பணிகளில் இருந்த அவரைச் சந்தித்தோம்.

‘சிவலிங்கா’ படத்தின் கதை என்ன?

ஒரு சிறுவன் ரயிலில் போய் கொண்டிருக்கிறான். அந்த சிறுவ னோடு அவன் வளர்க்கும் புறாவும் பயணிக்கிறது. கடைசி ரயில் என் பதால் அதில் கூட்டம் குறைவாக இருக்கிறது. அந்த சிறுவன் தூங் கிக்கொண்டிருக்கும் சமயத்தில், கண் தெரியாத ஒருவர் அந்த ரயி லில் இருந்து இறங்க முயற்சிக் கிறார். அப்போது அந்த புறா சிறு வனை எழுப்புகிறது. கண் தெரியாத வர் கீழே விழுந்துவிடப் போகி றாரே என்று சிறுவன் உதவச் செல் லும்போது, எதிர்பாராத விதமாக பார்வையற்றவர் அவனைக் கீழே தள்ளி கொன்று விடுகிறார். சிறுவன் சாகும்போது அவனது ரத்தம் புறாவின் முகத்தில் தெறிக்கும். கொலைக்கு சாட்சியான புறா, அதை நாயகனிடம் சொல்வதுதான் ‘சிவலிங்கா’ படத்தின் கதை.

இந்தப் படத்தில் புறாவை எப்படி நடிக்க வைத்தீர்கள்?

சென்னையிலிருந்து டெல்லி வரை பறந்து சென்று பரிசு வாங்கிய புறாவைத்தான் இப்படத்தில் உபயோகப்படுத்தியுள்ளேன். அப்புறா வோடு நான் 2 நாட்கள் பழகி, சொல் வதையெல்லாம் கேட்க வைத்த பிறகு படப்பிடிப்பை நடத்தினேன். புறாவுக்கு சாரா என்று பெயர் வைத் துள்ளேன். படத்தில் அந்த புறா வுக்கு ஒரு பாடல்கூட இருக்கிறது.

இப்படத்தில் வடிவேலுவின் காமெடி எப்படி?

நாயகன் லாரன்ஸ் இப்படத்தில் சிபிஐ அதிகாரியாக நடித்துள்ளார். ‘சந்திரமுகி' படத்துக்குப் பிறகு வடி வேலுவுக்கு இப்படத்தில் பெரிய கதாபாத்திரம். சிபிஐ அதிகாரி லாரன்ஸிடம் திருடன் வடிவேலு மாட்டிக் கொண்டு கஷ்டப்படுவது போன்று காமெடி வைத்துள்ளேன். இப்படத்தில் வடிவேலுவின் பெயர் ‘பட்டு குஞ்சம்’.

அடுத்ததாக ‘மன்னன்’ படத்தை ரீமேக் செய்யவுள்ளதாக கூறப்படு கிறதே?

அது இன்னும் முடிவாக வில்லை. பேசிக்கொண்டு இருக் கிறோம். அப்படி எடுத்தால் முதலில் விஜயசாந்தி கதாபாத்திரத்துக்கு சரியான ஆள் வேண்டும். ‘மன் னன்’ படத்தை மீண்டும் எடுத்தால் கவுண்டமணி வேடத்தில் வடி வேலுவை நடிக்க வைக்கலாம் என்று பேசியுள்ளோம். பொருத்த மான நடிகர் நடிகைகள் கிடைத்தால் மட்டுமே ‘மன்னன்’ படத்தை மீண்டும் எடுக்க முடியும்.

உங்கள் படங்களில் அதிக மொழி களில் எடுக்கப்பட்ட படம் ‘சின்ன தம்பி’. அதை மீண்டும் ரீமேக் செய்ய முடியும் என நினைக்கிறீர்களா?

என்னுடைய படங்களை எப் போது ரீமேக் செய்தாலும் புதிதாக இருக்கும். ‘சின்ன தம்பி’ படத்தை எப்போது வேண்டுமானாலும் ரீமேக் செய்யலாம். அப்படத்துக்கு பலமே பிரபுவின் அப்பாவித்தனமும், குஷ்புவின் இளமையும்தான். அதை ஈடுகட்டும் அளவுக்கு கலைஞர்கள் கிடைப்பார்களா என்பது சந்தேகமாக உள்ளது.

இன்றைய திரையுலகம் எப்படி இருக்கிறது?

இன்றைய திரையுலகில் கதை கள் ஒரே மாதிரி இருந்தாலும் திரைக்கதையை புதுமையாக சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.

முதலில் ஒரு நடிகரை வைத்து நாம் என்ன செய்யப் போகிறோம் என்பதில் தெளிவாக இருக்க வேண்டும். மேலும் நடிகரை இயக்குநர் ரசிக்க வேண்டும். இன்று மக்கள் படத்தின் டீஸரைப் பார்த்தே, இது இந்த மாதிரியான படம் என்று முடிவு செய்து விடுகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x