Last Updated : 31 May, 2016 12:40 PM

 

Published : 31 May 2016 12:40 PM
Last Updated : 31 May 2016 12:40 PM

ஜி.வி.பிரகாஷ் நாயகியாக சாய்பல்லவியிடம் பேச்சுவார்த்தை

ராஜீவ் மேனன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கவிருக்கும் படத்தின் நாயகி வேடத்துக்கு சாய்பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

'ப்ரூஸ் லீ', 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' மற்றும் 'கடவுள் இருக்கான் குமாரு' ஆகிய படங்கள் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தயாராகி வருகின்றன. இதில் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. இப்படத்தின் ட்ரெய்லரை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ஜூன் 1ம் தேதி வெளியிட இருக்கிறார்.

தற்போது ராஜேஷ் இயக்கும் 'கடவுள் இருக்கான் குமாரு' மற்றும் 'ப்ரூஸ் லீ' ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஜி.வி.பிரகாஷ்.

இப்படங்களைத் தொடர்ந்து ராஜீவ் மேனன் இயக்கும் படத்துக்கு தேதிகள் ஒதுக்கியிருக்கிறார் ஜி.வி.பிரகாஷ். இப்படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் 2 பாடல்கள் தயாராகிவிட்டது. படப்பிடிப்பு தொடங்குவதற்கான முதற்கட்ட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், இப்படத்தின் நாயகி வேடத்துக்கு சாய்பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறது படக்குழு. விரைவில் அவர் ஒப்பந்தம் செய்யப்படுவார் என்று படக்குழு சார்பில் நம்பிக்கையுடன் தெரிவித்தார்கள்.

இப்படத்தின் பெயர் 'ராமனின் மோகனம் ஜானகி மந்திரம்' என்றும், ஜனனி ஐயர் தான் நாயகி என்றும், மேலும் இப்படத்தின் ஒரு போஸ்டர் வடிவமைப்பு செய்யப்பட்டு இணையத்தில் பரவி வருகிறது. இதற்கு படக்குழு சார்பில் மறுப்பு தெரிவித்திருக்கிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x