Last Updated : 18 Jan, 2017 08:44 PM

 

Published : 18 Jan 2017 08:44 PM
Last Updated : 18 Jan 2017 08:44 PM

ஜல்லிக்கட்டு விவகாரம்: நாளை படப்பிடிப்புகள் ரத்து

ஜல்லிக்கட்டு விவாகரத்துக்கு ஆதரவு தெரிவித்து, நாளை ஒரு நாள் மட்டும் தமிழ் திரையுலக படப்பிடிப்புகள் ரத்து செய்யப்படுகிறது.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடைபெற வேண்டும் பல்வேறு ஊர்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது. இளைஞர்கள் பலரும் இப்போராட்டத்தில் கலந்து கொண்டு வருகிறார்கள். இளைஞர்கள் ஒன்றுக்கூடி நடத்தப்பட்டு வரும் இப்போராட்டத்துக்கு திரையுலகினர் பலரும் ஆதரவு தெரிவித்து வருகிறார்கள். இப்போராட்டம் தொடர்பாக நாளை மட்டும் தமிழ் திரையுலக படப்பிடிப்புகள் ரத்து என தொழிலாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக விடுதுள்ள அறிக்கையில், "தமிழர்களின் பாரம்பரியம், கலாச்சாரம், பண்பாடு, வீரத்தின் அடையாளமாக விளங்கும் 5000 ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்திலும் தமிழ்கூறும் மக்களாலும் நடத்தப்பட்டு வரும் ஏறுதழுவுதல், ஜல்லிக்கட்டு வீர விளையாட்டு தொன்மையான, நம் ரத்தத்தில் ஊறிய நிகழ்வை நடத்தவிடாமல் தமிழர்களின் உணர்வுகளை காயப்படுத்திய அந்நிய நிறுவனம் பீட்டாவை தடை செய்ய வேண்டும் என்று மத்திய அரசை வற்புறுத்தி இந்தியாவின் எதிர்காலம் நாளைய தேசம் இளைய பாரத்தினர் மாணவர்களை ஆதரித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம், தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தமிழ்நாடு சின்னத்திரை கூட்டமைப்பு, தென்னிந்திய திரைப்பட பத்திரிக்கை தொடர்பாளர் யூனியன் ஆகியோர் ஆதர வுடன் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் நாளை அடையாள வேலை நிறுத்தம் அறிவிக்கிறது.

நாளை திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி சம்மந்தப்பட்ட எந்த பணிகளும் நடைபெறாது என்று தெரிவித்துக் கொள்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x