Last Updated : 31 May, 2016 07:05 PM

 

Published : 31 May 2016 07:05 PM
Last Updated : 31 May 2016 07:05 PM

கபாலி இசை வெளியீட்டால் ரெமோ ஃபர்ஸ்ட் லுக் தள்ளிவைப்பு

'கபாலி' படத்தின் இசை வெளியீட்டால், சிவகார்த்திகேயனின் 'ரெமோ' பர்ஸ்ட் லுக் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'ரெமோ' படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது. கீர்த்தி சுரேஷ், சதீஷ், இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

ஆர்.டி.ராஜா தனது 24 AM ஸ்டூடியோஸ் நிறுவனம் மூலம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் 'ரெமோ' முதல் பாடல் ஜூன் 9ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்திருக்கிறது.

இந்நிலையில், ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடித்திருக்கும் 'கபாலி' படத்தின் இசை வெளியீடும் ஜூன் 9ம் தேதியே நடைபெற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், 'ரெமோ' படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீட்டை படக்குழு தள்ளி வைத்திருக்கிறது.

'ரெமோ' பர்ஸ்ட் லுக் வெளியீட்டு தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று படக்குழு சார்பில் தெரிவித்தார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x