Last Updated : 06 Oct, 2016 06:45 PM

 

Published : 06 Oct 2016 06:45 PM
Last Updated : 06 Oct 2016 06:45 PM

அப்பல்லோ அருகே நீடிக்கிறது படப்பிடிப்பு பாதிப்பு

அப்பல்லோவில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவருவதால், மருத்துவமனைக்கு அருகே இருக்கும் மணி மஹாலில் படப்பிடிப்பு அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.

காய்ச்சல் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா, கடந்த மாதம் 22-ம் தேதி சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

அப்பல்லோ மருத்துவமனையில் முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பெற்று வருவதால் தமிழ் திரையுலகில் சில படங்களின் படப்பிடிப்பும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஏனென்றால் அப்பல்லோ மருத்துவமனை அருகிலேயே மணி மஹால் என்ற படப்பிடிப்பு தளம் ஒன்று இருக்கிறது. அங்கு படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு ஒப்பந்தம் போடப்பட்ட அனைத்து படப்பிடிப்புகளுக்கும் அனுமதி மறுக்கப்பட்டது.

சிவா இயக்கத்தில் அஜித் நடித்துவரும் படத்தின் படப்பிடிப்புக்காக 2 நாட்களுக்கு மணி மஹாலை வாடகைக்கு எடுத்திருந்தார்கள். இதில் அஜித் இன்றி காஜல் அகர்வால் காட்சிகள் மட்டும் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு இருந்தது படக்குழு. முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து படப்பிடிப்பு அனுமதி மறுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஹைதராபாத்தில் அக்காட்சிகளை படமாக்கி இருக்கிறது படக்குழு. அஜித் சம்பந்தப்பட்ட காட்சிகளையும் அக்டோபர் 10-ம் தேதி முதல் ஹைதராபாத்தில் படமாக்க இருக்கிறார்கள்.

மேலும், அஜித் படம் மட்டுமன்றி பல்வேறு முன்னணி நடிகர்களின் படமும் அங்கு படப்பிடிப்பு நடத்த இருந்தார்கள். முதல்வர் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதைத் தொடர்ந்து அனைத்து படப்பிடிப்புகளுமே தற்போது வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்டு வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x