Published : 11 Oct 2018 07:40 PM
Last Updated : 11 Oct 2018 07:40 PM

சிரஞ்சீவி படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம்: வைரலாகும் புகைப்படம்

சிரஞ்சீவியின் 151-வது படமான 'சை ரா - நரசிம்ஹா ரெட்டி' படத்தில் அவரது நம்பகமான உதவியாளராக ஒபய்யா என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். இந்நிலையில் விஜய் சேதுபதியின் தோற்றம் குறித்த புகைப்படம் வெளியாகி அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கெடுத்த நரசிம்ஹா ரெட்டி என்பவரின் வாழ்க்கை வரலாறை முதல்முறையாக திரைக்கு கொண்டு வரும் படம் 'சை ரா - நரசிம்ஹா ரெட்டி'. இந்தப் படத்தை, சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா தயாரிக்க, சிரஞ்சீவி நரசிம்ஹா ரெட்டியாக நடிக்கிறார்.

சுரேந்தர் ரெட்டி இயக்கும் இப்படத்தில் சிரஞ்சீவியோடு, அமிதாப் பச்சன், கிச்சா சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா, ஜெகபதிபாபு உள்ளிட்டோரும் நடிக்கின்றனர். மேலும் ஏ.ஆர்.ரஹ்மான் இசை, ரவிவர்மன் ஒளிப்பதிவு, ராஜீவன் கலை என மிகப் பிரம்மாண்டமாக இத்திரைப்படம் உருவாகிறது.

'அதனொக்கடே', 'கிக்', 'ரேஸ் குர்ரம்' உள்ளிட்ட வெற்றிப் படங்களின் இயக்குநர் சுரேந்தர் ரெட்டி. மேலும், ராம் சரண் நடித்த 'த்ருவா' ('தனி ஒருவன்' படத்தின் தெலுங்கு ரீமேக்) படத்தையும் இவர் இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சிரஞ்சீவியின் நம்பகமான உதவியாளராக ஒபய்யா என்ற கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், கிச்சா சுதீப் இதில் அவுக்கு ராஜா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். வீரத்திலகம், நீளமுடி, தலைப்பாகை என்று ராஜா காலத்து தோற்றத்துடன் விஜய் சேதுபதியும், போருக்குச் செல்லும் படைவீரனின் கவசத்தோடு கிச்சா சுதீப்பும் இருக்கும் புகைப்படம் வெளியானது. தற்போது அப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x