பெரும் எதிர்பார்ப்பில் 'பஜரங்கி'

'பஜரங்கி' படத்தின் போஸ்டர்!

'பஜரங்கி' படத்தின் போஸ்டர்!

Published : 28 Sep 2013 13:35 IST
Updated : 06 Jun 2017 11:39 IST

சிவராஜ் குமார் நடிப்பில் தயாராகியிருக்கும் 'பஜரங்கி' படத்தின் போஸ்டர்கள் மூலமே பெரும் எதிர்பார்ப்பு கிடைத்திருக்கிறது.

நடன இயக்குநராக இருந்து தற்போது இயக்குநராக வலம் வரும் ஹர்ஷா இயக்கத்தில் சிவராஜ் குமார் நடிக்கும் படம் தான் 'பஜரங்கி'. இப்படத்தின் போஸ்டர்களில் 6 பேக்கில் சிவராஜ் குமார் இருப்பது போன்று வெளியிட்டிருக்கிறார்கள்.

சிவராஜ் குமார் ரசிகர்கள் மத்தியில் இதற்கு பெரும் வரவேற்பு கிடைத்திருக்கிறது. இவ்வரவேற்பு படக்குழுவினரை உற்சாகம் கொள்ளச் செய்திருக்கிறது.

'பஜரங்கி' என்பதற்கு அனுமான் சக்தி படைத்தவன் என்று அர்த்தம். இப்படத்தின் முதல் பாதியில் சாதாரண மனிதனாகவும், இரண்டாம் பாதியில் 75 வருடங்கள் முன்னர் காடுகளில் நடப்பது போன்று சிவராஜ் குமாருக்காக திரைக்கதை அமைத்திருக்கிறார் ஹர்ஷா.

நல்லதற்கும் கெட்டதற்கும் இடையே நடக்கும் போராட்டங்கள் போன்று வழக்கமான திரைக்கதை அமைக்காமல், ஒரு மனிதனுக்கும் அவனது முன்னாள் வாழ்க்கைக்கும் இருக்கும் வரலாற்றை தெரிவித்திருக்கிறார்கள்.

'கிலியா','பிருகாளி','சின்காரி' போன்ற வரவேற்பு பெற்ற படங்களின் கதையை எழுதிய ஹர்சா இப்படத்தின் கதையை எழுதியிருக்கிறார். நந்தா மற்றும் ஷக்தி இருவரும் திரைக்கதை அமைக்க உதவி புரிந்திருக்கிறார்கள்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவை அக்டோபர் முதல் வாரத்தில் பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.

Keywords
More In
This article is closed for comments.
Please Email the Editor