Published : 07 Sep 2018 12:20 PM
Last Updated : 07 Sep 2018 12:20 PM

பிரபல ஹாலிவுட் நடிகர் பர்ட் ரெனால்ட்ஸ் மரணம்

பிரபல ஹாலிவுட் பழம்பெரும் நடிகர் பர்ட் ரெனால்ட்ஸ் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82.

Smokey and the Bandit, Deliverance ஆகிய படங்களின் மூலம் ஹாலிவுட்டில் பிரபலம் அடைந்தவர் பர்ட் ரெனால்ட்ஸ்.

2010 -ம் ஆண் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்ட பர்ட் ரெனால்ட்ஸ் தனது மகனுடன் வசித்து வந்திருக்கிறார்.

இந்த நிலையில், உடல் நலக் குறைவுக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தத அவர் மாரடைப்புக் காரணமாக உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

 

ரெனால்ட்ஸின் இறப்பு குறித்து அவரது குடும்பத்தினர் தரப்பில், “ரெனால்ட்ஸ் வெறும் நடிகராக மட்டுமல்ல அவர் அன்பான குடும்ப தலைவராகவும் இருந்தார். அவருக்கு கடந்த சில வருடங்களாக உடல் நலக் குறைவு ஏற்பட்டிருந்தது. அவரது இந்த மரணம் எதிர்பாராத ஒன்று. அவரை வாழ்நாள் முழுவதும் உற்சாகப்படுத்திக் கொண்டிருந்த அவரது ரசிகர்களுக்கு நன்றி” என்று கூறியுள்ளனர்.

பார்ட் ரெனால்ட்ஸின் இந்த இறப்பு மிகுந்த வலியை ஏற்படுத்தியுள்ளதாக ஹாலிவுட் நடிகர்கள் பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x