Published : 10 Jul 2018 11:50 AM
Last Updated : 10 Jul 2018 11:50 AM

பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பும் ஆன்ட்-மேன்

மார்வெல் நிறுவனத்தின் 'ஆன்ட்- மேன் அண்ட் த வாஸ்ப்' (Ant-man and the wasp) திரைப்படம் கடந்த வாரம் வெளியானது.

பால் ரூட், எவாஞ்சலின் லில்லி நடித்து பீட்டன் ரீட் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்தப் படம் இதுவரை 76 மில்லியன் டாலர்கள் வசூலை குவித்துள்ளது.

இதன் முதல் பாகமான ‘ஆன்ட்-மேன்’ (2015) வெளியான முதல் வாரத்தில் வசூலித்த தொகை 57 மில்லியன் டாலர்கள். ‘ஆன்ட்-மேன்’ 2 திரைப்படம் அமெரிக்காவில் மட்டும் 4,206 திரையரங்கங்களில் வெளியாகியுள்ளது.

160 மில்லியன் டாலர் பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்த படம் ’ஜுராசிக் வேர்ல்டு : த ஃபாலன் கிங்டம்’, ’இன்கிரெடிபில்ஸ் 2’ ஆகிய படங்களை பின்னுக்கு தள்ளி பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்தில் உள்ளது.

இந்த வார நிலவரப்படி ’இன்கிரெடிபில்ஸ் 2’ 29 மில்லியன் டாலர்களும், ’ஜுராசிக் வேர்ல்டு : த ஃபாலன் கிங்டம்’ படம் 28.6 மில்லியன் டாலர்களும் வசூலித்து இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களில் உள்ளன.

'ஆன்ட்- மேன் அண்ட் த வாஸ்ப்' இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில் இந்த வாரம் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x