Published : 01 Jun 2018 11:23 AM
Last Updated : 01 Jun 2018 11:23 AM

கோடம்பாக்கம் சந்திப்பு: கமலுடன் அனிருத்!

ங்கர் இயக்கத்தில் அப்பா, மகன் என இருவேடங்களில் கமல் நடித்து, கடந்த 1996-ல் வெளியாகி வெற்றிபெற்ற படம் ‘இந்தியன்’. லஞ்ச ஊழலுக்கு எதிராகக் களமிறங்கும் முன்னாள் சுதந்திரப்போராட்ட வீரராக அப்பா கமல், மகனையே தண்டிக்கும் ‘இந்தியன் தாத்தா’ கதாபாத்திரம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. தற்போது இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் 22 வருடங்களுக்குப் பிறகு ஷங்கர் இயக்கத்திலேயே உருவாக இருக்கிறது. இதற்கு அனிருத் இசையமைப்பாளராக ஷங்கர், கமல் தரப்பால் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘அருவி’க்கு அடுத்து

‘அருவி’ படத்தை இயக்கி ரசிகர்கள், விமர்சகர்களின் ஒருமித்த பாராட்டைப்பெற்றவர் அந்தப் படத்தின் இயக்குநர் அருண் பிரபு. அவரது இயக்கத்தில் ஒரு படத்தை தயாரிக்கிறது 24 ஏ.எம் ஸ்டுடியோஸ் படநிறுவனம். ‘மேயாத மான்’ படத்தின் இசை அமைப்பாளர்களில் ஒருவரான பிரதீப் குமார் இந்தப் படத்துக்கு இசை அமைக்கிறார்.

பாடலாசிரியர் சிவகார்த்திகேயன்

யன்தாரா முதன்மைக் கதாபாத்திரம் ஏற்றிருக்கும் ‘கோலமாவு கோகிலா’ படத்தில் பாடலாசிரியராக உருமாறியிருக்கிறார் நடிகர் சிவகார்த்திகேயன். அவர் எழுதியுள்ள ‘கல்யாண வயசு’ என்ற பாடலுக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார். 50 லட்சம் பார்வையாளர்களை கடந்து குறுகிய காலத்தில் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறது.

இப்படியும் ஒரு படம்!

டந்த 2014-ல் ஜெயம்ரவி, அமலா பால் நடிப்பில் சமுத்திரக்கனி இயக்கத்தில் வெளியான படம் ‘நிமிர்ந்து நில்’. இந்தப் படம் ‘ஜன்தா பாய் கபிராஜு’ என்ற தலைப்பில் தெலுங்கிலும் உருவானது. ஜெயம் ரவி ஏற்ற கதாபாத்திரத்தில் நானி நடித்திருந்தார். 2015-ல் வெளியான இந்தத் தெலுங்குப் படத்தை தற்போது ‘வேலன் எட்டுத் திக்கும்’ என்ற தலைப்பில் மீண்டும் தமிழில் வெளியிடுகிறார்கள். “ ஊழல், லஞ்சம் என்கிற சாத்தான் இல்லாத நாடே இன்று இல்லை. எவ்வளவு பெரிய குற்றங்களுக்கும் ஒரு விலை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. விலை கொடுத்தால் குற்றவாளி நிரபராதியாகவும், நிரபராதி குற்றவாளியாகவும் மாற்றப்படுகிறான். இப்படிப்பட்ட சூழ்நிலையை மாற்றப் போராடும் அரவிந்த் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் நானி.

மும்பையில் ‘விசுவாசம்’

சிவா இயக்கத்தில் அஜித் நான்காவது முறையாக நடிக்கும் படம் ‘விசுவாசம்’. ஹைதராபாத்தில் முதல்கட்ட படப்பிடிப்பை முடித்த படக்குழு, இரண்டாம் கட்டப்படப்பிடிப்பை மும்பையில் நடத்தத் தயாராகிவருகிறது. அஜித், நயன்தாரா, யோகி பாபு, தம்பி ராமையா ஆகியோர் நடித்துவரும் இந்தப் படத்தில் தற்போது சாக்‌ஷி அகர்வாலும் இணைந்திருக்கிறார். டி.இமான் இசையமைத்துவருகிறார். அஜித்தின் ‘விவேகம்’ படத்தை தயாரித்த ‘சத்யஜோதி ஃபிலிம்ஸ்’ நிறுவனமே ‘விசுவாசம்’ படத்தையும் தயாரித்து வருகிறது.

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x