Published : 02 Nov 2016 10:21 AM
Last Updated : 02 Nov 2016 10:21 AM

சினிமா எடுத்துப் பார் 82: பிரபுவுக்கு விட்டுக்கொடுத்த ரஜினி!

குரு சிஷ்யன்’ படத்தில்தான் கவுதமி அறிமுகம். ரஜினியுடன் முதன் முதலில் சேர்ந்து நடனம் ஆடு வதில் அவருக்குத் தயக்கம். ‘‘உன்கூட ஃபர்ஸ்ட் டைம் நடிக்கிறதுல கவுதமி பயப் படுறாங்க. முதல்ல ரெண்டு நாளைக்கு ஸீன்ஸ் எடுப்போம். அடுத்து இந்தப் பாட் டுக்குள்ள போவோம்!’’னு ரஜினியிடம் சொன்னேன். ‘‘ஆமாம் சார். அது சரியா இருக்கும்’’னு அவரும் சொன்னார். அதே மாதிரி அடுத்து ரெண்டு நாட்கள் காட்சி களை ஷூட் பண்ணினோம். கவுதமிக்கு புலியூர் சரோஜா பிரம்பால் அடிக்காத குறையாக வார்த்தைகளால் அடித்து அவரை தயார் செய்துவிட்டார்.

ரஜினி யோடு காட்சிகளில் நடித்ததால் கவு தமிக்குப் பயம் போய்விட்டது. பயத்தி னால் ஏற்பட்ட ஆட்டம் போய் நடனம் சிறப்பாக ஆடினார். அதன் பிறகு, தமிழில் தொடர்ந்து பல வெற்றிப்படங்களைக் கொடுத்தார். எந்த மாதிரியான கதா பாத்திரம் என்றாலும் திறமையான நடிப்பை வெளிப்படுத்தக்கூடிய நடிகை கவுதமி. தமிழில் தனக்கான ஒரு தனி இடத்தைப் பெற்று பெரிய அளவில் வெற்றியும் பெற்றவர். இன்றும் நடித்துக் கொண்டிருப்பவர். அவருக்கு வாழ்த் துக்கள்!

படத்தின் ரெண்டாவது ஹீரோவாக இளைய திலகம் பிரபு நடித்தார். அவர் எங்க யூனிட்டோட செல்லப் பிள்ளை. ரஜினி செய்ய வேண் டிய ஒரு சண்டைக் காட்சியைப் பிரபுவுக்கு விட்டுக் கொடுத்தார். ‘‘ஏன் ரஜினி?’’ன்னு கேட்டதும், ‘‘பிரபு பண்ணட்டும் சார். அவர் சண்டை போட்டுட்டிருக்கும்போது கடைசியில நான் புகுந்து ஃபினிஷ் பண்ணிக்கிறேன்’’ன்னு சொன்னார். அதுக்குக் காரணம் பிரபுவுக்கு வாய்ப்பு கொடுத்து அவரை உயர்த்து வதற்காகவே. இரண்டு ஹீரோக் கள் என்றால் சண்டை வரும். இந்த இரண்டு ஹீரோக்களும் கைகோர்த்துக் கொண்டார்கள்.

மைசூரில் ஷூட்டிங். பிரபுவுக்கு ஜோடி யாக நடித்த சீதா அப்போது தமிழ், தெலுங்கு என்று பிஸியாக இருந்தார். பிரபுவையும், அவரையும் வைத்து மைசூர் பிருந்தாவன் கார்டனில் ‘வா வா வஞ்சி இளமானே…’ பாடலைப் படமாக்க வேண்டும். அந்தப் பாடலை எடுத்தால் ரஜினிக்கு வேலை இருக்காது. ரஜினி யைப் பார்த்து, ‘‘ஒருநாள் முழுக்க பிரபு, சீதா இருவரையும் வைத்து பாடல் ஷூட் டிங்கை முடிச்சிடுறேன். நீ வேணும்னா இந்த ஒரு நாள் மட்டும் சென்னைக்குப் போய்ட்டுத் திரும்பி வந்துடு’’ன்னு சொன் னேன். அதுக்கு ரஜினி, ‘‘முத்துராமன் சார்… உங்களுக்கு நான் கொடுத்தது 25 நாட்கள்தான். அதுக்கு மேல என்னால ஒருநாள் கூட இருக்க முடியாது. நான் ஊருக்குப் போனா அப்புறம் இன்னொரு நாள் கேட்டீங்கன்னா என்னால தர முடியாது சார். நான் இங்கேயே இருக்கேன்!’’ன்னு சொன்னார்.

‘‘அதெல்லாம் ஞாபகத்துல இருக்கு ரஜினி. ஒண்ணும் பிரச்சினை இல்லை. சரியா 25 நாட்கள்ல முடிச்சுடுவோம்’’னு சொன்னேன். மறுநாள் பிரபு, சீதா நடனம் ஆட வேண்டிய பாடல் காட்சியை ஷூட் பண்ணிக்கொண்டிருந்தேன். திரும்பிப் பார்த்தால் ரஜினி ஷூட்டிங் ஸ்பாட்ல வந்து நிற்கிறார். ‘‘ என்ன ரஜினி?’’ன்னு கேட்டேன். ‘‘ரூம்ல இருந்தாலே வேலை செய்யலைன்னு சொல்லிடுவீங்க. அதான் ஸ்பாட்டுக்கு வந்துட்டேன். இன் னைக்கு உங்களோட நான் வேலை செய் யப் போறேன்!’’ என்று சொல்லிவிட்டு, டிராலி தள்ளினார். எனக்கு உதவியாக இருந்து வேலை செய்தார். ஆக மொத்தத்தில் அவர் எங்கள் யூனிட்டில் ஒரு நடிகர் மட்டுமில்லை; தொழில்நுட்பக் கலைஞரும்கூட என்பதை எந்தவித பந்தாவும் இல்லாமல் நிரூபித்தார்.

இந்தப் படத்தின் கதையே நகைச் சுவை நிறைந்தது. நகைச்சுவை காட்சி கள் எழுதுவதென்றால் பஞ்சு அருணா சலம் அவர்களுக்கு ஐஸ் க்ரீம் சாப்பிடு வது மாதிரி. முக்கிய வேடத்தில் நடித்த நடிகர்கள் ரஜினி, பிரபு, மனோரமா, வினுசக்ரவர்த்தி இப்படி பலமான சுவையை தங்களின் நடிப்பின் மூலம் உச்சிக்குக் கொண்டு சென்றுவிட்டனர். இன்றைக்கு நினைத்து பார்த்தாலும் சிரிப்பு வரும்.

‘குரு சிஷ்யன்’ படத்தினுடைய கிளை மாக்ஸ் சண்டைக் காட்சிகளை ஆந்திரா வில் இருக்கும் அரக்குவாளி குகைகளில் எடுக்கலாம் என்று திட்டமிட்டிருந்தோம். ரஜினியினுடைய கால்ஷீட் நாட்கள் குறைந்துகொண்டே வந்தன. அரக்கு வாளி போய் ஷூட்டிங் பண்ணினால் போய்வரவே 4 நாட்கள் ஆகிவிடும். அதனால் எங்கள் ஆர்ட் டைரக்டரை வைத்து சென்னையில் அரக்குவாளியை உருவாக்கிவிட்டோம். அதில் படப் பிடிப்பை வெற்றிகரமாக நடத்தி முடித் தோம். ரஜினி கொடுத்த 25 நாட்களில் 23 நாட்களிலேயே படத்தை முடித்து 2 நாட்களை அவருக்கு திருப்பிக் கொடுத் தோம். அதற்குக் காரணம் யூனிட்டுடைய ஒற்றுமையான திட்டமிட்டச் செயல்பாடு கள்தான். ‘ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு’ என்பதை இதன் மூலம் மற்றவர்களுக்கும் சொல்லிக்கொள்கிறேன்.

‘குரு சிஷ்யன்’ எதிர்பார்த்ததைப் போல் அல்ல; எதிர்பார்த்ததையும்விட மிகப் பெரிய வெற்றி பெற்றது. காலத்தினாற் செய்த உதவிக்காக ரஜினிக்கு என்றும் நன்றி சொல்வோம்.

கலைப்புலி எஸ்.தாணு அவர்கள் இன்றைக்கு தயாரிப்பாளர் சங்கத் தலைவர். இளைய தளபதி விஜய் நடித்த ‘தெறி’ படத்தின் தயாரிப்பாளர். எல்லாவற்றுக்கும் மேலாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தின் தயாரிப்பாளர். ‘கபாலி’ படம் என்றதும் எனக்கு இங்கே இன்னொரு விஷயம் நினைவுக்கு வருகிறது. நாங்கள் ‘குரு சிஷ்யன்’ படத்தை மைசூரில் ஷூட் செய்து கொண்டிருந்தபோது ரஜினி அவர்களைப் பார்க்க தாணு சார் அங்கே வந்தார். ரஜினியிடம், தனக்கொரு படம் நடித்துக்கொடுக்குமாறு கேட்டார். ரஜினி காந்த், ‘‘நிறைய படங்கள்ல நடிச்சிட்டிருக் கேன். காலம் கனியும்போது நிச்சயம் பண்ணுவோம்’’ என்று 1988-ல் சொன் னார். காலம் கனிய 27 ஆண்டுகள் ஆகிவிட் டன. 2015-ல் ‘கபாலி’ படத்தில் நடிக்க ஒப் புக்கொண்டார். ‘கபாலி’படம் பா.இரஞ் சித் இயக்கத்தில் சூப்பரோ சூப்பர் ஹிட்! உலகமெங்கும் ‘நெருப்புடா… கபா லிடா…’ என்று முத்திரை பதித்துவிட்டது. இப்படி வெற்றிப் படங்களை எடுத்த தாணு அவர்களை இன்றைக்கு இந்த உயர்நிலையில் பார்க்கும் போது எனக்கு மகிழ்ச்சி.. மகிழ்ச்சி.. மகிழ்ச்சி!

கலைப்புலி தாணு என்று எல்லோரும் சொன்னாலும் நான் விளம்பரப் புலி தாணு என்றுதான் சொல்வேன். அவர் படங்களுக்கு விளம்பரம் செய்வதில் இருந்து போஸ்டர் அடிப்பது, ப்ளெக்ஸ் பேனர் வைப்பது எல்லாமே பிரம்மாண்டம் தான். எல்லோரும் நாலு போஸ்டர் ஒட்டி னால் இவர் 16 போஸ்டர் ஒட்டுவார். மற்ற படங்களுடைய விளம்பரங்கள் இவர் விளம்பரத்தில் காணாமல் போய்விடும். அந்த அளவுக்கு பிரம்மாண்டம். ரஜினி நடித்த ‘பைரவி’ படத்துக்கு கலைப்புலி தாணுதான் சென்னை விநியோகஸ்தர். ‘பைரவி’ படத்துக்கு பெரிய பெரிய போஸ் டர் அடித்தார். அந்த போஸ்டர்களில்தான் முதன்முதலில் அவர் ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் நடிக்கும் ‘பைரவி’ என்று விளம்பரப்படுத்தினார். அவர் கொடுத்த ‘சூப்பர் ஸ்டார்’ என்ற பட்டம்தான் இன் றைக்கு ரஜினியோடு நிரந்தரமாக ஒட்டிக் கொண்டுவிட்டது. பட்டம் கொடுத்த அவரை எல்லோரும் பாராட்டுவோம்!

கலைப்புலி தாணு அவர்கள் தயா ரித்த ‘நல்லவன்’ படத்துக்கு நான் இயக்கு நர் என்று சொல்லிக் கொள்வதில் பெருமைப்படுகிறேன். அந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்தவர் கேப்டன் விஜயகாந்த். வளர்ந்து கொண்டிருந்த விஜயகாந்த் அவர்களை ஒருமுறை ஏவி.எம் படத்தில் வில்லனாக நடிக்க கேட்டேன். அவர் சிரித்துக்கொண்டே, ‘‘நான் இப்போது கதாநாயகனாக நடித் துக்கொண்டிருக்கிறேன். சிறந்த கதா நாயகனாக வருவேன் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. வில்லனாக நடிக்க கூப்பிட்டதற்கு நன்றி. என்னை விட்டு விடுங்கள்!’’ என்று கூறினார். அந்த நம் பிக்கைதான் அவரை தமிழகத்தின் தலை சிறந்த கதாநாயகர்களில் ஒருவராக இடம்பிடிக்க வைத்தது. கேப்டனின் நம் பிக்கைக்கு கிடைத்த வெற்றிதான் அது!

‘நல்லவன்’ படத்தில் விஜயகாந்த் இரண்டு கதாபாத்திரங்களில் தனது வித்தி யாசமான நடிப்பாற்றலை வெளிக்காட்டி னார். இந்தப் படத்தின் வெளிப்புறக் காட்சிகளைப் பனி சூழ்ந்த காஷ்மீர் பகுதிகளில் எடுத்தோம். அப்போது ஏற்பட்ட அதிர்ச்சிகள் இன்னும் என்னை அதிர வைக்கின்றன. எது என்ன?

- இன்னும் படம் பார்ப்போம்… படம் உதவி: ஞானம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x