Published : 15 Dec 2018 08:24 PM
Last Updated : 15 Dec 2018 08:24 PM

சென்னை பட விழா | ரஷிய கலாச்சார மையம்  | டிசம்.16 | படக்குறிப்புகள்

காலை 10.00 மணி | AKKAMMANA BHAGYA  | DIR: C.V.NANDEESHWAR  | KANNADA | 117'

இந்திய சுதந்ததிரம் பெறுவதற்கு முன்புள்ள ஒரு கன்னட கிராமம். இந்தியா சுதந்திரத்திற்காக போராடிக்கொண்டிருக்கும்போது அதே காலத்தில்தான் தங்கள் சமூக, கலாச்சார பிடியிலிருந்து தங்கள் சுயத்தன்மைக்காகவும் பெண்களும் போராடத் தொடங்கினர். அதில் முக்கியமான பெண்மணியான அக்கமானா பாக்யா என்பவரின் கதை இது.  ஒரு பெண்ணும் சமூகத்தில் சுயேட்சையாய் காலூன்றி வெற்றிகாண வேண்டும் என்ற லட்சிய வேகத்தோடு தன் சொந்த உழைப்பில் போராடி வெற்றிபெறுகிறார். என்றாலும் ஆணாதிக்க சமுதாயத்தில் அது அவ்வளவு சதாரணமானதல்ல என்பதை இறுதியில் உணர்கிறார். கணவன் இறந்த பிறகு இரண்டு குழந்தைகளை வைத்துக்கொண்டு அக்காமானா பாக்யா படும் பாடுகளும் வீரமும் தீரமும் அன்பும் பண்பும் மிக்க வாழ்க்கையை நம் கண் முன் கொண்டு நிறுத்தியுள்ளார் அறிமுக இயக்குநர் சி.வி.நந்தீஸ்வர். ஏராளமான விருதுகளை அள்ளிக் குவித்துள்ளது இத்திரைப்படம்.

படத்தின ட்ரெய்லர்

பகல் 12.00 மணி | PAINTING LIFE | DIR: BIJU KUMAR DAMODRAN | BENGALI  | 2017 | 86'

பிஜூ என அழைக்கப்படும் இயக்குநர் பிஜூகுமார் தாமோதரனின் சமீபத்திய படம் இது. இவர் தனது படங்களுக்காக உலகெங்கிலும் ஏராளமான விருதுகளைப் பெற்றுள்ளார். பெயிண்டிங் லைப் திரைப்படம் ஒரு பாலிவுட் திரைப்படக்குழு தங்கள் அடுத்தப் படத்தின் பாடல் மற்றும் நடனக் காட்சிகளை படம்பிடிக்க இமயமலை செல்கிறது. திடீரென ஏற்பட்ட சிக்கல்களினால் அவர்களது வாழ்க்கை வெளிஉலகத்திடமிருந்து துண்டிக்கப்படுகிறது. இதனால் அவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் மாறிய வாழ்க்கை முறைகள் அனைத்தையும் அற்புதமாக படமாக்கியுள்ளார் இயக்குநர் பிஜூகுமார் தாமோதரன். இப்படத்திற்கும் தனது முந்தைய படங்களைப் போல விருதுகள் குவிந்துள்ளன. மலையைத் தொட்டுச் செல்லும் வெண்மேகங்களும், பச்சைபசேல் இயற்கை அழகுகளும் சிறந்த ஒளிப்பதிவில் நம்மை கொள்ளைகொள்கின்றன.

மாலை 3.00 மணி  'இரவுக்கு ஆயிரம் கண்கள்' தமிழ்த் திரைப்படம்

மாலை 6.00 மணி  'வடசென்னை' தமிழ்த் திரைப்படம்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x