Published : 05 Jan 2017 05:58 PM
Last Updated : 05 Jan 2017 05:58 PM

சென்னை பட விழா | பெலாஸோ | ஜன.6 | படக்குறிப்புகள்

சென்னை 14-வது சர்வதேச பட விழாவில் வெள்ளிக்கிழமை (ஜன.6) பெலாஸோ அரங்கு 7-ல் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை »

காலை 10.00 மணி | AFTER THE STORM / UMI YORI MO MADA FUKKU | DIR: HIROKAZU KOREEDA | JAPAN | 2016 | 117'

புகழ்பெற்ற எழுத்தாளர் ரியோட்டா. தனக்குக் கிடைத்த பணத்தையெல்லாம் சூதாட்டம் மூலம் செலவழிக்கிறான். இதனால் அவனுடைய குடும்பத்துக்கு, அவனின் குழந்தைகளுக்கு நேரம் செலவிடுவதில்லை. ரியோட்டாவின் தந்தை மறைவுக்குப் பிறகு, அவனின் வயதான தாயும், அழகான முன்னாள் மனைவியும் தனியாகச் செல்கிறார்கள். நெடு நாட்கள் கழித்து புயல்வீசிய ஒரு கோடை இரவில், ரியோட்டாவுக்கும், குடும்பத்துக்கும் இடையில் உண்மையான பந்தம் மீள்கிறது.

பகல் 12,00 மணி | TAMARA / TAMARA | DIR: ELIA SCHNEIDER | VENEZUELA | 2016 | 90'

ஆணாகப் பிறந்த டோமஸ் அட்ரியன், வழக்கறிஞராகி, மனைவி குடும்பத்துடன் வாழ்ந்தாலும் தன்னுள் இருக்கும் பெண்மையை அடையாளம் காண முடிவு செய்கிறார். தன்னை பெண்ணாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் சமுதாயத்துடன் டமாராவின் போராட்டம் என்ன? வெனிசுலாவின் முதல் திருநங்கை அரசியல்வாதி டமாரா அட்ரியனின் உண்மைக் கதை இது.

பிற்பகல் 2.30 மணி | THE SEAL OF THE SUN / TAIYO NO FUTA | DIR: FUTOSHI SATO | JAPAN | 2016 | 90'

மார்ச் 11, 2011. கிழக்கு ஜப்பான் நிலநடுக்கத்தால் நடுங்கிக் கொண்டிருக்கிறது. பேரழிவின் காரணமாக நாட்டு மக்கள் அனைவரும் மறைந்துபோகும் அபாயத்தில் ஜப்பான் இருக்கிறது. நிலநடுக்கத்தால் ஜப்பானின் வடகிழக்குப் பகுதியில் இருக்கும் ஃபுகுஷிமா தய்ச்சி அணு உலையின் மின்சாரம் தடைபடுகிறது. இதனால் அணு உலையில் குளிர்விப்பான் பகுதி இயங்காமல் போகிறது. அணு உலை வினைபுரியும் இயந்திரத்தில் வெப்பம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

மாலை 4.40 மணி | ZAZY / ZAZY | DIR: MATTHIAS X.OBERG | GERMANY | 2016 | 99'

18 வயதான ஸாசி இத்தாலியின் சிறிய நகரம் ஒன்றில் தையல் பயிற்சி மேற்கொண்டிருக்கிறாள். அங்கு அழகிய பணக்கார பெண்ணான மரியானாவை சந்திக்கிறாள். மரியானா தன் குழந்தைகளுடன் அங்கு விடுமுறையை கழித்து வருகிறாள். மரியானாவுக்கும் தன் முதலாளி பாட்ரிக்குக்கும் காதல் என்பதை ஸாசி தெரிந்து கொள்கிறாள். ஒருநாள் மரியானாவுடன் சுற்றுலா செல்லும் பாட்ரிக் காணாமல் போகிறான். தொடர்ந்து இதை பயன்படுத்தி, ஸாசியும், அவள் காதலன் டாமெக்கும் மரியானாவை மிரட்டி பணம் வாங்க ஆரம்பிக்கின்றனர்.

மாலை 7.00 மணி | MA' ROSA / MAMA ROSA | DIR: BRILLANTE MA MENDOZA | PHILIPPINES | 2016 | 110'

மா ரோசாவுக்கு நான்கு குழந்தைகள். அவள் சொந்தமாக தன்னைச் சுற்றிஉள்ள ஏழைமக்களுக்காக ஒரு சிறிய மளிகைக் கடை நடத்திவருகிறாள். இறுதியாக தனது கணவனை நெஸ்டோரை அவள் சந்திப்பது இன்னொரு பக்கத்தில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட வைக்கிறது. ஒருநாள் அவள் கைது செய்யப்படுகிறாள். ரோசாவின் குழந்தைகள் ஊழல்மிக்க போலிசாரிடமிருந்து தங்கள் போலீசாரை விடுவிக்க என்னவேண்டுமானாலும் செய்ய துணிகிறார்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x