Published : 05 Jan 2017 08:53 PM
Last Updated : 05 Jan 2017 08:53 PM

சென்னை பட விழா | ஐனாக்ஸ்-2 | ஜன.6 | படக்குறிப்புகள்

சென்னை 14-வது சர்வதேச பட விழாவில் வெள்ளிக்கிழமை (ஜன.6) ஐனாக்ஸ் ஸ்கிரீன் 2-ல் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை >>

காலை 10.00 மணி | OUR EVERYDAY LIFE / NASA SVAKODNEVNA | DIR: MARCO BELLOCCHIO | BOSNIA AND HERZEGOVINA, CROATIA, GERMANY, SLOVENIA |2015 | 90'

முன்னாள் இளம் போர் வீரர் ஒருவர் போருக்குப் பிந்தைய போஸ்னியாவின் தீர்வுகாணப்படாத அரசியல் - பொருளாதார கடினச் சூழ்நிலைமைகளை எதிர்கொள்கிறார். இவரது தந்தை முகமட் தொழிற்சாலை ஒன்றின் உயரதிகாரி. ஆனால் இவரது தலைமைக்கு எதிராக சதி நடைபெறுகிறது. தாய் மரியா ஓய்வு பெற்ற ஆசிரியை, சூழ்நிலைகள் நல்ல நிலைமைகளுக்குத் திரும்பும் என்ற தீரா நம்பிக்கையுடன் இருப்பவர். திருமணமாகாத ஆனால் கருத்தரித்த மகள் செனடா, ஆகியோரின் நம்பிக்கைகள், அவநம்பிக்கைகள், வாழ்க்கைத் தெரிவுகள் குறித்த தந்தையின் கண்டிப்புகள் இவற்றுக்கிடையே மோசமடையும் தாயின் உடல்நிலை. அதன் பின்..?

காலை 12,15 மணி | THE VIOLIN PLAYER | DIR: BAUDDHAYAN MUKHERJI | ITALY | 2016 | 74'

ஓர் உண்மையான கலைஞர் தன்னை வெளிப்படுத்தவேண்டும். இந்த உலகம் அவனை கலைக்கு வெளியே தாக்க முயல்கிறது. அவன் அதுமாதிரி நேரங்களில்தான் தன் கலையை சிறப்பாக பிரசவிக்கவேண்டும். எங்காவது சாலையோர மோசமான தெரு மூலைகளில் அவனைக் காணநேரிடுவதுண்டு. ஆனால் அங்குதான் அவன் தனது கலையை சின்னச்சின்னதாக வளர்க்கிறான். தி வயலின் பிளேயர் கதையானது ஒரு வயலின் இசைக்கலைஞனின் ஒருநாள் வாழ்க்கையை பாலிவுட் திரையுலகின் முக்கியமான எளிதில் கிட்டாத இடம் ஒன்றில் தனது திறமையை வெளிப்படுத்த அமைந்த வாய்ப்பைப் பற்றி பேசுகிறது. அந்த முக்கியமான நாளில் உண்மை, இசை, கலை என்றால் என்ன என்பதைப் பற்றியெல்லாம் மிகச்சிறப்பாக வெளிப்பட்டு நிற்கிறது. ஒரு நாள், ஒரு அந்நியன், ஒரு கோரிக்கை, ஒரு வாழ்க்கை எல்லாம் சேர்ந்து சாதாரணமானவற்றை யெல்லாம் ஒன்றுமில்லாமல் ஆக்கிவிடுகின்றன என்பதுதான் வயலின் பிளேயர் திரைப்படம்.

பிற்பகல் 2.30 மணி | STEP BACK TO GLORY | DIR: PO-JUI CHANG | TAIWAN | 2013 |125'

தைவானியச் சிறுமி ஒருத்தி புதிதாக ஒரு பள்ளிக்குப் படிக்க செல்கிறாள். அங்கே கயிறு இழுக்கும் போட்டியில் நிறைய நண்பர்கள் அவளுக்குக் கிடைக்கின்றனர். அவர்கள் சிறுமியின் வாழ்க்கையில் உடன்வருகின்றனர்.

மாலை 4,30 மணி HORMONIUM | FUCHI NI TATSU | DIR: KOJI FUKADA | JAPAN | 2016 | 118'

இயக்குநர் கொஜி ஃபுகாடா தன்னுடைய ஹார்மோனியம் படத்தின் மூலம் சாதாரண ஜப்பானிய குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களை, உள்நாட்டு விவகாரத்தை விவரமாகப் பேசியிருக்கிறார். தோஷியோ, அவரின் மனைவி, இளைய மகள் ஹொட்டாடு ஆகியோர் மகிழ்ச்சியாக வாழ்ந்துவருகின்றனர். தோஷியோவின் வொர்க்‌ஷாப்பில், அப்போதுதான் சிறையில் இருந்து வெளிவந்திருக்கும் யசாகாவ வேலைக்குச் சேர்க்கின்றனர். அதன்பிறகுதான் பிரச்சனைகள் ஆரம்பிக்கின்றன..!

மாலை 7,15 மணி | THE CUT | THE CUT | DIR: FAITH AKIN | JAPAN | 2016 | 118'

துருக்கியின் மார்டின் நகரில் கொல்லனாகப் பணிபுரியும் நாசரேத்தின் வாழ்வில் இருந்து துவங்குகிறது படம். அங்கே உலகப் போர் துவங்குவதற்காக சூழ்நிலை ஏற்பட்டிருந்தாலும், நாசரேத்தின் குடும்பத்தினர் நம்பிக்கையுடன் இருக்கின்றனர். அருகிலுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான ஆண்கள் காணாமல் போகின்றனர். ஒரு நாள் ஓட்டாமான் வீரர்கள் நாசரேத்தின் வீட்டுக் கதவைத் தட்டி அவனை ராணுவத்துக்கு அழைத்துச் செல்கின்றனர்.

அங்கே அவனுக்கு சில நண்பர்களும் கிடைக்கின்றனர். நாட்கள் உருண்டோடுகின்றன. ஏராளமான ஆர்மேனியர்கள் கைதாவதைக் கவனிக்கிறான் நாசரேத். சில அதிகாரிகள் அங்கு வந்து நாசரேத் மற்றும் அவனின் நண்பர்களை இஸ்லாம் மதத்துக்கு மாறச் சொல்கின்றனர். மறுப்பவர்களின் நாக்குகள் துண்டிக்கப்படுகின்றன. நாசரேத் பேச முடியாதவன் ஆகிறான். அந்த துண்டிப்பு (cut) அவனின் குடும்பம் மற்றும் வாழ்க்கையுடனான துண்டிப்பாகவும் மாறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x