Published : 05 Jan 2017 07:52 PM
Last Updated : 05 Jan 2017 07:52 PM

சென்னை பட விழா | ஆர்கேவி, ஆர்சிசி | ஜன.6 | படக்குறிப்புகள்

சென்னை 14-வது சர்வதேச பட விழாவில் வெள்ளிக்கிழமை (ஜன.6) ஆர்.கே.வி. ஸ்டூடியோ மற்றும் ரஷ்ய கலாச்சார மைய அரங்கில் திரையிடப்படும் படங்களில் அறிமுகக் குறிப்புகள் இவை >>

காலை 10.00 மணி BITTERSWEET | BITTERSUB | DIR: KISHNA ASHU BHATTI | GERMANY | 2016 | 95'

தனது பெற்றோருடன் கடுமையாக சண்டையிடும் 19 வயது மினா, பாலியல் தொழிலில் இருக்கும் தனது சகோதரி மாண்டியுடன் தங்குகிறாள். பணப் பிரச்சினையில் இருக்கும் டோனி என்கிற டிஜேவை காதலிக்க ஆரம்பிக்கிறாள். டோனிக்கு கடன் கொடுத்த இரண்டு பேர், 3 நாட்களில் 11,000 யூரோக்களை தர வேண்டும் என காலக்கெடு விதித்து மிரட்டுகின்றனர். மாண்டி மினாவிடம் பணம் திரட்ட, கொடூரமான யோசனை ஒன்றை தருகிறாள். மினாவின் விலையுயர்ந்த கன்னித்தன்மையே அது.

பகல் 12.00 மணி | BETWEEN VALLEYS | ENTRE VALES | DIR: PHILIPPE BARCINSKI | BRAZIL | 2012 | 80'

வின்செண்ட் ஒரு தொழிலதிபர், கைரோவின் அப்பா, அர்பணிப்புடன் பணிபுரியும் பல் மருத்துவர் மரினாவை திருமணம் செய்துக் கொள்கிறார். இவ்வாறு ஒரு சாரசரி வாழ்க்கை வாழ்ந்துக் கொண்டிருந்த வின்செண்டின் வாழ்வில் அடுத்தடுத்து நடக்கு எதிர்பாறாத சம்பவங்களள் அனைத்தையும் இழக்க செய்கிறது. அதனைத் தொடர்ந்து வின்செண்டின் வாழ்க்கை தலைகீழாக மாறுகிறது. வின்செண்ட் என்ற பெயர் மாறுகிறது. குப்பை கிடங்கில் வாழத் தொடங்குகிறார். இவ்வாறு நொறுங்கப்பட்ட நிலையில் மீண்டும் தனது அடையாளத்தை நிருபிக்கும் மனிதனின் பயணத்தை கூறுகிறது. எண்ட்ரே வாலெஸ்/பிட்வின் என்ற திரைபடம்.

பிற்பகல் 2.30 மணி BORN IN 1987 | BORN IN 1987 | DIR: MAJID TAVAKKOLI | IRAN | 2016 | 80'

லட்சியக் கனவுகளையும் அபிலாஷைகளையும் கொண்ட இளம் ஈரானியர்களிடையே எழும் பிரச்சனைகளை இப்படம் அலசுகிறது. முக்கியமாக காதல் அவர்களின் வாழ்வில் எந்தளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை இயக்குநர் மஜீத் தவாக்கொலி மிகச் சிறப்பாக இயக்கியுள்ளார். இத்தகைய எல்லோரும் அறிந்த ஒரு பிரச்சனைகளை இவர் தனித்துவமாக கையாண்டுள்ளார். ஒரு இளம் ஜோடி தங்களை மிகவும் செல்வந்தர்கள் போல பாவனை செய்துகொள்வதோடு தங்களின் நாட்களை டெஹ்ரானின் பணக்கார வட்டத்திலேயே உழல்கிறார்கள். சாகச விளையாட்டுகளாகவே நகைச்சுவையாக அமைக்கப்பட்டுள்ள இப்படம் எதிர்பாராத திருப்பங்களோடு நகர்கிறது. இறுதி திகிலோடு முடிவடைகிறது என்பதுதான் சஸ்பென்ஸ். இயக்குநர் தவாக்கொலியின் மாஸ்டர்பீஸ் இது.

மாலை 4.00 மணி | CLOUDY SUNDAY | OUZERI TSITSANI | DIR: MANOUSSOS MANOUSSAKIS | GREES | 2016 | 116'

1942-ம் வருடம் தெஸ்ஸலநீக்கி என்ற இடத்தில் ஜெர்மனி ஆக்கிரமிப்பின் போது ஒரு யூத பெண்ணுக்கும், கிறிஸ்துவ பையனுக்கு இடையில் மலரும் காதலைச் சொல்லும் படமே க்ளவுடி சண்டே. இனவெறி நிறைந்த சட்டங்கள் விதிக்கப்படுகின்றன. அந்த ஊரில் நிலவி வரும் குரூரத்ததையும், வெறுப்பையும் மறக்க, உள்ளத்தையும், மனதையும் மயக்கும் வாசிலிஸ் சீட்ஸானிஸின் நாட்டுப்புற பாடல்கள் நிறைந்த சிறிய க்ளப் மட்டுமே உதவுகிறது. யூதர்களின் வேட்டை கொஞ்சம் கொஞ்சமாக பரவ, எளிமையான விருப்பங்கள் எல்லம் வாழ்க்கையையே மாற்றும் முடிவுகளாக மாறுகிறது. ஜார்ஜ் ஸ்கார்பாடோனிஸ் எழுதிய ‘ஒசேரி சீட்ஸானிஸ்’ என்ற நாவலை அடிப்படையாகக் கொண்ட படம்.

இரவு 7.15 மணி | PIONEER | PIONER | DIR: ERIK SKJOLDBJAERG | NORWAY | 2016 | 106'

80களில் நார்வேயில் எண்ணெய் கிணறு தோண்டிய காலத்தில் நடத்தப்பட்ட சதித் திட்டங்களை இப்படம் வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. எண்ணெய் வளமும் எரிவாயுக்களும் பொதிந்துகிடக்கும் வடக்கு கடல் பகுதியிலிருந்து 500 மீட்டர் ஆழத்தில் ஆழ்துளை குழாய் செலுத்தி அதிலிருந்து எண்ணெய்யை கரைக்குக் கொண்டுவர திட்டமிடுகின்றனர். தொழில்முறையாக நீரில் மூழ்குபவரான பீட்டர் அதை ஈடுபாட்டோடு ஆழமான நார்வே கடலின் தரைமட்டத்திற்கு ஒழுக்கமும், பலமும் ஊக்கத்துடனும் இந்த முக்கியமான பணியை பொறுப்பேற்று செல்கிறார். ஒரு சின்ன விபத்தில் திடீரென்று எல்லாமும் மாறிவிடுகிறது. தனது பார்வையை அவர் இழக்கிறார். தனது தலைக்கு மேலே தன் உயிருக்கு ஆபத்து என்ற நிலை தயாராக இருப்பதை அவர் உணர்கிறார்.

ரஷ்ய கலாச்சார மையம்:

பிற்பகல் 2.00 | HARIKATHA PRASANGA | DIR: ANANYA KASARAVALLI | KANNADA | 2016 | 106'

யக்ஷகானா கலைஞர் ஹரிச்சந்திரா என்பவரின் வாழ்க்கையை சித்தரிக்கும் திரைப்படம். எனினும் இப்படம் ஷர்மிளா மற்றும்சுந்தர் ஆகியோர் இயக்கிய ஹரிச்சந்திரா பற்றிய டாக்குமெண்டரியோடு தொடங்குகிறது. திரைப்படத்தைப் பொறுத்தவரை ஹரிச்சந்திரா எனும் கலைஞனின் பெண்மைத் தன்மையை ஒரு தேடலுக்குரிய ஆய்வோடு அணுகுகிறது. ஹரிச்சந்திரா யஷ்கானா நாட்டிய நாடகங்களில் பெண் வேடமிட்டே வலம்வந்த ஹரிசந்திரா தான் ஆணாக இருந்து பெண்ணாக நடிப்பவரா? அல்லது பெண்ணாக இருந்துகொண்டு வாழ்க்கையில் ஆணாக நடித்துக்கொண்டிருப்பவரா என்ற கேள்வி ஒருஆன்மிக நிலைக்கு நம்மை அழைத்துச்செல்கிறது. புகழ்பெற்ற கன்ன இயக்குநர் கிரீஷ் காசரவல்லியின் மகள் அனன்யா காசரவல்லி இயக்கிய படம்.

மாலை 4.00 மணி | JOKER | DIR: RAJU MURUGAN | TAMIL | 2016 | 126'

மாலை 6.30 மணி | DEVI | DIR: VAJAY | TAMIL | 2016 | 125'

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x