Published : 01 Jan 2019 11:44 AM
Last Updated : 01 Jan 2019 11:44 AM

பழம்பெரும் இந்தி நடிகரும் கதாசிரியருமான காதர் கான் காலமானார்

பழம்பெரும் இந்தி நடிகரும் திரைக்கதை ஆசிரியருமான காதர் கான் நாள்பட்ட நோய் காரணமாக கனடாவில் காலமானார். அவருக்கு வயது 81.

இதுகுறித்து பிடிஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய காதர் கானின் மகன் சர்ஃபராஸ், ''எங்களின் தந்தை எங்களை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். தொடர்ச்சியான உடல்நலக் குறைவு காரணமாக பாதிக்கப்பட்டவர், டிசம்பர் 31-ம் தேதி 6 மணிக்கு காலமானார். 16 முதல் 17 வாரங்கள் மருத்துவமனையில் இருந்த அவர், நேற்று மதியம் கோமாவுக்குச் சென்றார்.

அந்த நிலையிலேயே அவரின் உயிர் பிரிந்தது. அவரின் இறுதிச் சடங்குகள் அனைத்தும் கனடாவிலேயே நடைபெறும். அப்பாவுக்காகப் பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி'' என்று தெரிவித்துள்ளார்.

காபூலில் பிறந்த காதர் கான், 1973-ல் ராஜேஷ் கண்ணாவின் 'தாக்' படத்தில் நடிக்க ஆரம்பித்தார். 300 படங்களுக்கும் மேல் நடித்த அவர், சுமார் 250 படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார்.

திரைக்கதை ஆசிரியராக மன்மோகன் தேசாய் மற்றும் பிரகாஷ் மேராவுடன் காதர் கான் ஏராளமான படங்களில் பணிபுரிந்துள்ளார்.

காதர் கானின் மறைவுக்கு இந்தித் திரையுலகினர் தங்களின் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x