Published : 15 Apr 2019 12:43 PM
Last Updated : 15 Apr 2019 12:43 PM

பிடியை இறுக்கும் வருமான வரித் துறை

நிதி ஆண்டு தொடங்கி விட்டது. கடந்த நிதி ஆண்டுக்கான வருமான வரித் துறை படிவங்களை தாக்கல் செய்ய வேண்டிய நேரமும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால் இம்முறை கடந்த ஆண்டைக் காட்டிலும் கூடுதல் விவரங்களை நீங்கள் தாக்கல் செய்ய வேண்டியிருக்கும்.

ஆண்டுதோறும் இதை சம்பிரதாய சடங்காக ஆடிட்டர் மூலமோ அல்லது சுயமாகவோ வருமான வரி படிவங்களை (ஐடிஆர்) தாக்கல் செய்வது வழக்கம்.

ஆனால் இம்முறை கூடுதல் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும். அது என்னவென்று முன்கூட்டியே தெரிந்து கொண்டால் கடைசி நேர அதிர்ச்சி மற்றும் தொந்தரவுகளை தவிர்க்கலாம்.

ஐடிஆர் - 1 படிவம் யாருக்கு பொருந்தும்

இருப்பதிலேயே மிகவும் எளிமையான விவரம் கோரும் படிவம் ஐடிஆர் 1-தான். கடந்த ஆண்டிலிருந்துதான் இது எளிமைப் படுத்தப்பட்டது. 2017-ம் ஆண்டில் இது ஒரு பக்க படிவமாக மாற்றப்பட்டது.

முன்பு வரை இது 7 பக்கங்களைக் கொண்டதாக இருந்தது. 2018-ம் ஆண்டில் இந்த படிவத்தை இந்திய குடிமக்கள் மட்டுமே தாக்கல் செய்தால் போதுமானது என்ற வரையறைக்கு உட்படுத்தப்பட்டது.

இந்த ஆண்டு ஏதேனும் நிறுவனத்தில் இயக்குநர்களாக உள்ள தனி நபர்கள் மற்றும் பட்டியலிடப்படாத பங்கு களில் முதலீடு செய்துள்ளவர்கள் மிகவும் சிக்கலான ஐடிஆர் 2 படிவத்தை (ஐடிஆர் படிவம் 2-ல் ஏற்கெனவே பொருந்து வோருக்கான விதிமுறைகளுக்குள் பட்டோர்) தாக்கல் செய்ய வேண்டும்.

அதாவது சம்பளம் மூலமான வருமானம், ஒரு சொந்த வீடு உடையவர், பிற இனங்கள் மூலம் வருமானம் பெறுவோர், மொத்த வருமானம் ரூ. 50 லட்சம் மற்றும் வேளாண் வருமானம் ரூ. 5 ஆயிரம் வரை உள்ளிட்டோரும் இந்தப் படிவத்தை தாக்கல் செய்ய வேண்டும்.

ஐடிஆர் - 2 படிவத்தில் தர வேண்டிய கூடுதல் தகவல்கள்

ஐடிஆர் -1 படிவத்துக்கான விதிமுறை யில் பொருந்தாதவர்கள் கடந்த காலம் வரை ஐடிஆர் - 2 படிவத்தை தாக்கல் செய்தால் போதுமானது என்றிருந்தது. அதேபோல வர்த்தகம் மூலம் வருமானம் இல்லாதவராயிருந்தாலும் ஐடிஆர் - 2 படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது.

இதனால் ஆண்டு தோறும் ஐடிஆர் - 2 படிவத்தை தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதேபோல ஒவ் வொரு ஆண்டும் இந்தப் பிரிவினருக்கு கூடுதல் தகவல்கள் கோரப்பட்டு வருகின்றன. இதனால் பூர்த்தி செய்ய வேண்டிய பக்கங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதில் குறிப்பாக, வீட்டு முகவரி சார்ந்தது, பட்டியலிடப்படாத நிறுவனங் களில் முதலீடு தொடர்பானது. அடுத்து சம்பளம் மூலம் பெறப்படும் வருமானம் மற்றும் கடந்த ஆண்டு சம்பளமாக பெறப் பட்ட தொகை விவரம், இந்த ஆண்டு எவ்வளவு கிடைக்குமென்ற விவரம், வரி விலக்கு கோரிய தொகை, வரி பிடித்தம் போக கிடைக்கும் நிகர சம்பளம் (அதாவது நிரந்தர கழிவு உள்ளிட்ட சலுகை நீங்கலாக) உள்ளிட்ட விவரங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த மாற்றங்கள் அனைத்தும் ஐடிஆர் - 1 படிவம் மற்றும் ஐடிஆர் 2 படிவங்களுக்குப் பொதுவானவையாகும்.

இவை தவிர ஐடிஆர் -2 படிவத்தில் பிற இனங்கள் மூலம் பெறப்படும் முதலீட்டு ஆதாயம் குறித்த விவரங்கள் கோரப் பட்டுள்ளன. பங்கு உள்ளிட்ட முதலீட்டு ஆதாயம், அவற்றின் மொத்த மதிப்பு உள் ளிட்டவற்றையும், அந்த முதலீடு நீண்ட கால அல்லது குறுகிய கால முதலீடா என்ற விவரத்தையும் அளிக்க வேண்டும்.

அதேபோல மாற்றம் செய்யப்பட்ட அசையும் சொத்துகள் விவரம் அவை விற்பனை செய்யப்பட்டிருந்தால் விற்பனை செய்தவரின் நிரந்தர கணக்கு எண் (பான்) விவரங்களும் அளிக்கப்பட வேண்டும். எத்தனை சதவீத பங்கு உள்ளது மற்றும் அசையா சொத்தாக இருப்பின் அதன் முகவரி உள்ளிட்ட விவரங்களும் கோரப்பட்டுள்ளன. இந்த ஆண்டு முதல் இத்தகைய விவரங்கள் தாக்கல் செய்யப்பட வேண்டியது கட்டாயமாகும்.

வட்டித் தொகை பெறப்பட்டால் அது குறித்த விவரங்களை அளிக்க வேண்டும். வங்கி சேமிப்பு, கூட்டுறவு, தபால் அலுவலக சேமிப்பு, வரி பத்திரம் மூலம் கிடைக்கும் வட்டி உள்ளிட்டவை குறித்த விவரங்களை அளிக்க வேண்டும்.

அதேபோல 80 - ஜி பிரிவு மூலம் நன்கொடைக்காக பெறப்படும் வரி விலக்கு குறித்து விவரம் அளிக்க வேண்டும். ரொக்க தொகையாக அளித் தது மற்றும் எந்தெந்த வழிகளில் நன் கொடை அளிக்கப்பட்டது என்ற விவரத்தை அளிக்க வேண்டும்.

ஐடிஆர் - 4-ல் செய்யப்பட்ட மாற்றங்கள்

இது அனைவருக்குமானது அல்ல. முன்கூட்டியே கணித்து எவ்வளவு வரி செலுத்த வேண்டும் என தீர்மானிப் பவர்கள் தற்போது கூடுதலாக இரண்டு விவரங்களை தர வேண்டும். 44 ஏஇ பிரிவின் கீழ் வரி செலுத்துவோர் இப்போது பதிவு, உரிமை, அனுப்பப்பட்ட சரக்குகளின் அளவு, மீண்டும் பெறப்படும் அளவு உள்ளிட்ட விவரங்களை அளிக்க வேண்டும்.

இதன் மூலம் இந்த வகையில் வரி ஏய்ப்பு தடுக்கப்படும். ஜிஎஸ்டிஐஎன் விவரமும் அளிக்க வேண்டும். இதன் மூலம் விவரங்கள் அனைத்தும் மறு பரிசீலனை செய்யவும் வாய்ப்பு உள்ளது.

-சி பர்வதவர்த்தினி

vardhini.c@thehindu.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x