Published : 11 Mar 2019 11:47 AM
Last Updated : 11 Mar 2019 11:47 AM

ரூ. 6,000 எழுப்பும் ஆயிரம் கேள்விகள்

நாடே பிரதமர் மோடி அள்ளித்தரும் 6 ஆயிரம் ரூபாயைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கிறது. தேர்தலுக்கு முன்பே இந்தத் திட்டத்தின் கீழ் ரூ. 2 ஆயிரத்தை கொடுப்பதில் மாநில அரசுகள் மிகத் தீவிரமாகச் செயலாற்றி வருகின்றன. அதிலும் தமிழகத்தில் வேகம் ரொம்பவே அதிகம்.

குடும்ப அட்டைகளையும், அடை யாள அட்டைகளையும் எடுத்துக் கொண்டு கொத்துக்கொத்தாக மக்கள் அரசு அலுவலகங்களை மொய்த்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த அவசரம் தான், விவசாயிகளுக்கு வருமான உத்தரவாதம் தரும் இந்த திட்டத்தின் மீது பல கேள்விகளை எழுப்புகிறது.

ஐந்து வருடங்களாகக் கண்ணுக்குத் தெரியாத விவசாயிகள், தேர்தல் நெருங் கும் சமயத்தில் நெருக்கமாகத் தெரிவது ஒன்றும் இந்திய அரசியல் களத்தில் விசித் திரமான நிகழ்வு இல்லை. என்றாலும், இந்தத் திட்டத்தினால் பலன் ஏதுமில்லை இது வெறுமனே அரசியல் அஸ்திரம் என்றும் ஒதுக்கிவிட முடியாது. அதற்கு முதலில் இதுபோன்ற நேரடி பணப் பரிமாற்ற திட்டங்கள் சரிதானா என்பதைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம்.

பெரும்பாலான வளரும் நாடுகளில் நிபந்தனையற்ற நேரடி பணப் பரி மாற்றம் வறுமையை குறைப்பதற்கு ஒரு கருவியாக பயன்படுத்தப்பட்டு வரு கிறது. அதாவது பணம் நேரடியாக பயனாளியின் வங்கி கணக்கில் வைக்கப் படுவதாகும். இதுபோன்ற திட்டங் களைப் பெரும்பாலான பொருளாதார வல்லுநர்கள், அரசியல்வாதிகள் அங்கீகரித்துள்ளார்கள்.

பொருளாதார நிலைகளில் அதிக அளவிலான ஏற்றத் தாழ்வுகள் இருக்கும் ஒரு நாட்டில் இதுபோன்ற சில திட்டங்கள் அவசிய மானவை என்பதுதான் பெரும்பாலான வர்களின் கருத்தாக உள்ளது. இப்படியான திட்டங்களில் வழங்கப் படும் பணமோ, பொருளோ அல்லது சலுகையோ அவர்களுடைய வாழ்க் கையில் சிறிதளவேனும் மாற்றத்தைக் கொண்டுவந்துவிடாதா என்பதுதான் இந்தத் திட்டங்களை ஆதரிப்பவர்கள் முன்வைக்கும் கருத்து.

2019-20-க்கான நிதி அறிக்கையில், இந்திய விவசாய பெருங்குடி மக் களுக்கு, பிரதம மந்திரி கிசான் சம்மான் எனும் திட்டத்தை மத்திய அரசு துவக்கி யுள்ளது. இத்திட்டப்படி, சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு மூன்று தவணையாக ரூ.2000 வீதம் ஆண்டு ஒன்றுக்கு ரூ.6,000 வழங்கப்பட உள்ளது. இந்தத் தொகையானது நேரடி பணப் பரிமாற்ற முறையின் மூலம் நேரடியாக விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்பட உள்ளது.

தேசிய மாதிரி கணக்கெடுப்பு (2012-13) அறிக்கையின்படி பார்த்தால், 0.01 முதல் 0.4 ஹெக்டர் நிலத்தினை சொந்தமாக கொண்ட குடும்பங்களின் சராசரி ஆண்டு வருமானம் 2017-18-ல் ரூ.5481- ஆக உள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது.

அதேபோல், 0.4 முதல் 1 ஹெக்டர் மற்றும் 1 முதல் 2 ஹெக்டர் நிலத்தினை சொந்தமாக கொண்ட குடும்பங்களின் சராசரி ஆண்டு வருமானம் முறையே ரூ.6,926 மற்றும் ரூ. 9,699 என்று கணக்கிடப்பட்டுள்ளது. எனவே, பிரதம மந்திரி கிசான் சம்மான் திட்டத்தின் மூலம் கொடுக்கப்படும் ரூ.6,000 தொகையானது 0.01-0.4 ஹெக்டர் நிலத்தினை கொண்ட விவசாயிகளின் ஆண்டின் மொத்த நிகர வருமானத்தில் 109.4 சதவிகிதத்தை கொண்டது.

அதேபோல் 0.4 முதல் 1 ஹெக்டர் மற்றும் 1 முதல் 4 ஹெக்டர் நிலத்தினை கொண்ட விவசாயிகளின் ஆண்டின் மொத்த நிகர வருமானத்தில் முறையே 86.60 சதவீதம் மற்றும் 61.90 சதவீதத்தைக் கொண்டது. எனவே, மேற் கண்ட சதவீதத்தை பார்க்கும் பொழுது பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் மூலம் கொடுக்கப்படும் ரூ. 6,000 மிகவும் சிறிய தொகை என்று கூறி விட முடியாது.

இந்தியாவைப் பொறுத்தமட்டில், இது போன்ற பொதுவான மற்றும் ஒரு சார்புடைய அடிப்படை வருமானம் சார்ந்த திட்டங்கள் சாத்தியமென 2017-18-ன் பொருளாதர ஆய்வில் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும், பழைய நலன் சார்ந்த திட்டங்களுக்கு மாற்றாக இவை இருக்குமெனவும் கருதப்படுகிறது. இந்த மாதிரியான திட்டங்களை, அரசியல் சார்ந்த கூறுகளைத் தவிர்த்துவிட்டு பார்த்தால், பயன் தரக்கூடியதாகவே தெரிகின்றன.

காரணம், இந்தியாவில் முன்னெப் போதும் இல்லாத அளவுக்கு வேலைவாய்ப்பின்மை 6.1 சதவீதமாக இன்றளவும் உள்ளது. இந்த வேலை வாய்ப்பின்மையின் நிலை கிராமப்புறங் களில் மிகவும் மோசமடைந்துள்ளது. கிராமப்புறத்தில் ஆண்களின் வேலை வாய்ப்பின்மையானது 2011-12-ல் 5 சதவீதமாக இருந்தது 2016-17-ல் 17.4 சதவீதமாகவும் மற்றும் பெண்களின் வேலைவாய்ப்பின்மையானது 4.8 சதவீதத்திலிருந்து 13.6 சதவிகிதமாகவும் உயர்ந்துள்ளது. இதில் படித்தவர்களும் அடங்குவர்.

எனவே, இந்த வருமான உத்தர வாதத் திட்டம் எதிர்காலத்தில் தொடரும் பட்சத்தில், அதற்கே உரிய சில சிக்கல்களைக் களைவது முக்கியமான தாகப் படுகிறது. ஏனெனில், நடைமுறை யில், இதுபோன்ற திட்டங்களைப் பயன் படுத்தி தங்களை உயர்த்திக் கொண் டவர்களின் எண்ணிக்கை என்னவோ மிக மிகச் சொற்பம் தான். இங்குதான் இதுபோன்ற திட்டங்களின் மீதான சந்தேகங்களும் எழுகின்றன.

அவற்றில் மிக முக்கியமானது திட்டங்கள் சரியான பயனாளிகளைச் சென்று சேர்கின்றதா என்பது. உதாரணமாக, தமிழகத்தையே எடுத்துக்கொள்ளலாம். வறுமை கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் அனைவருக்குமே ரூ. 2,000 கொடுக் கப்படும் என்ற அறிவிப்பு, இந்தத் திட்டம் எந்தப் பாதையில் செல்கிறது என்பதைத் தெள்ள தெளிவாக்குகிறது.

இந்திய மனித வளர்ச்சி ஆய்வின்படி 2004-05-ல் வேளாண்மையை முதன்மை தொழிலாக கொண்ட 35% குடும்பங்கள் 2011-12-ல் வேளாண்மை சாராத வேறு தொழிலுக்கு மாறியுள்ளனர். 2015-ம் ஆண்டின் தொழிலாளர் சம்மேளனத் தின் விவரங்கள்படி வேளாண்மையில் ஈடு பட்டுள்ள மொத்த விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களில் 49% விவசாயிகள் மற்றும் 70% விவசாயம் சார்ந்த தொழிலா ளர்கள் தகுதியானவர்களாக இருந்தும் முழு நேர அளவு வேலை பெறுவதற்கு பெரும் போராட்டத்தைச் சந்திக்க வேண்டியிருக்கிறது.

பெரும்பாலான நாட்கள் வேலையே கிடைப்பது இல்லை. இதனால், மாறிக்கொண்டிருக்கும் பொரு ளாதார சுழற்சியில், இவர்களில் பெரும்பாலானோர் வேளாண்மையி லிருந்து கட்டிடம் கட்டுதல், சாலை அமைப்பு வேலைகள் போன்றவற் றுக்கு மாறி விவசாயிகள் என்ற அடை யாளத்தையே இழந்து நிற்கின்றனர்.

விவசாயத்தோடு ஒப்பிடுகையில், இவ்வாறு விவசாயம் சாராத தொழில் களில் வருமானம் கூடுதலாக இருக்கிறது என்பதே காரணம். விவசாயத்தின் மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து இன்றைய காலத்தில் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்வது சவாலாக இருக்கிறது. ஆனால், இந்த ரூ. 6,000 திட்டத்தில் இவர்களெல் லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளப் படுவார்களா என்பது சந்தேகமே.

இந்தத் திட்டத்தின் பயனாளிகள் யார்? திட்டம் சொல்லும் சிறு, குறு விவசாயிகளா? அப்படியெனில் விவசாயத் தொழி லாளர்கள் இதில் பயனாளிகளாக வர முடியாதா? விவசாயத் துறையில் நிலம் உள்ள விவசாயிகளைக் காட்டிலும் விவ சாயத்தைக் காப்பவர்கள் விவசாயத் தொழிலாளர்கள்தான். ஆனால், இந்தத் திட்டம் விவசாய நிலம் உள்ளவர் களுக்குத்தான் என்கிறது.

இது ஒருபக்கம் இருக்க, ஒவ்வொரு வருடமும் வேளாண்மை சார்ந்து இருப் பவர்களை துல்லியமாக கணக்கெடுக்க தனியாக எந்த வழிமுறைகளும் இல் லாத நிலையில் இந்த திட்டத்தின் வெற்றி யென்பது கேள்விக்குறிதான்.

அடுத்த மிக முக்கியமான கேள்வி, 2 ஹெக்டர் நில அளவு கொண்ட விவசாயி கள் அனைவருக்கும் விவசாயம்தான் முதன்மைத் தொழிலா என்பது. விவசாயத்தைத் தொடர்ந்து செய்ப வர்களைவிட, விவசாயத் தொழிலில் இருந்து வெளியேறியவர்களே அதிகம். எனவே, இந்த திட்டத்தின் முக்கிய குறிக்கோளான விவசாய உற்பத்தி திறனை அதிகப்படுத்துதல் என்பதும் கேள்விக்குறிதான்.

உதாரணத்திற்கு, 2012-13-ம் ஆண்டு தேசிய மாதிரி ஆய்வின்படி ஏறக்குறைய 2.9 கோடி குடும்பங்கள் 0.1 முதல் 0.4 ஹெக் டர் நிலங்களை சொந்தமாகக் கொண்டுள் ளனர். இருப்பினும் அவர்களின் சராசரி ஆண்டு நிகர விவசாய வருமானத்தின் பங்கு வெறும் 16.5 சதவிகிதமே. அதே போல் 3.1 கோடி குடும்பங்கள் 0.4 முதல் 1 ஹெக்டர் நிலங்களை சொந்தமாக கொண்டுள்ளனர். இவர்களின் சராசரி ஆண்டு நிகர விவசாய வருமானத்தின் பங்கு 41% ஆகும்.

எனவே, இந்தவகை யான திட்டங்களை காட்டிலும் விவசாய கடன்களை தள்ளுபடி செய்தல் மிக கவர்ச்சிகரமானதாகவும் மற்றும் பயனுள் ளதாகவும் இருக்கும். ஏனெனில், விவ சாயக் கடன்கள் பயிர் சாகுபடி செய்யக் கூடிய செலவினங்களை உள்ளடக்கிய தாக இருக்கும். மேலும், இந்த நேரடி பணப்பரிமாற்றத்தின் போது வழங்கப் படும் பணம் விவசாயம் அல்லாத செயல்களுக்கு செலவு செய்யப்படுவதற் கான வாயப்பும் அதிகம் உள்ளது.

கடன்களைத் தள்ளுபடி செய்வதிலும் சிக்கல்கள் உள்ளன. கடன் தள்ளுபடி சலுகையால் பலன் பெறுபவர்கள் பெரும்பாலும் பணம் படைத்தவர்களாக இருக்கிறார்கள். காரணம், அரசால் அங்கீகரிக் கப்பட்ட கடன்களை ஏழை விவசாயிகள் பெறுவதில்லை. கேட்ட உடன் கை மேல் பணம் கிடைக்கும் கடன்களுக்கு அவர்கள் முன்னுரிமை தருகிறார்கள். அத்தகைய கடன்களால் உண்டாகும் விளைவுகளைப் பற்றி அவர்கள் யோசிப் பதும் இல்லை. மேலும், கடன் தள்ளுபடி என்பது ஆடி தள்ளுபடி போல, தேர்தல் கால தள்ளுபடியாகவே மாறிவிட்டது.

- பேராசிரியர் ம. உமாநாத் | umanath@mids.ac.in, விஞ்ஞானி எஸ். ஜே. பாலாஜி | balaji.sj@icar.gov.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x