Published : 11 Mar 2019 11:44 AM
Last Updated : 11 Mar 2019 11:44 AM

கோடீஸ்வரர்களை உருவாக்கும் பெங்களூரு

முன்பெல்லாம் பணக்காரர்களின் வளர்ச்சி என்பது பரம்பரை சொத்து, பரம்பரை தொழில் ஆகியவற்றின் அடிப்படையிலான வளர்ச்சியா கவே பெரும்பாலும் இருந்தது. ஆனால், இன்று கதையே தலைகீழாக மாறிவிட் டது. ஒரு ஐடியா உங்களது வாழ்க் கையையே மாற்ற வல்லது. அந்த அள வுக்கு திறமைக்கும், தொழில்நுட்ப நுண் ணறிவுக்கும் இப்போது மதிப்பு அதிகம்.

இணையப் பயன்பாடு அதிகரித்ததால் ஆன்லைன் தொழில்களுக்கு ஏகபோக வரவேற்பு உள்ளது. போட்டியை சமாளிக் கும் ஐடியாவும், நீண்டகால வளர்ச்சிக் கான பிசினஸ் மாடலும் உங்களிடம் இருந் தால், ஒரு பைசா கையில் இல்லாவிட் டாலும் ஒரே நாளில் நீங்கள் கோடீஸ்வரர் ஆகிவிடலாம். முதலீடு செய்ய உலகின் எந்த மூலையிலிருந்தும் ஆட்கள் தயாராக இருக்கிறார்கள். அதுபோக, ஐபிஓ உள்ளிட்ட பணம் திரட்டும் வழிகளும் உள்ளன. நிகழ்கால உதாரணங்கள் பேடிஎம், ஓயோ, ஓலா, பிளிப்கார்ட்.

முன்பு தொழில் தொடங்குவது என்பது கடினமான ஒன்றாக இருந்தது. இன்று அதுதான் உலகிலேயே மிக எளி மையான விஷயமாக மாறிவிட்டது. நுகர் வோரை மையமாகக் கொண்ட தொழில் கள், வேகமாக வளரும் திறனைக் கொண் டுள்ளன. அதேசமயம் சேவையைப் பெறும் அளவுக்கு வாழ்க்கைத்தரமும் வருமானமும் உயர்ந்திருக்க வேண்டும். இவையனைத்தும் கச்சிதமாக அமைந் துள்ள நகரமாக இடமாக பெங்களூரு உள்ளது.

இதனால், இந்தியாவில் உள்ள நகரங் களிலேயே கோடீஸ்வரர்களை அதிகமாக உருவாக்கும் திறன் கொண்ட நகரமாக பெங்களூரு இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. நைட்பிராங்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கையில் இந்தியா வில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 163-ஆக உயருமென கூறியுள்ளது. அதில் 40 சதவீத பங்களிப்பை பெங்களூரு நகரம் தன் வசம் வைத்துள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

சொத்து உருவாக்கம், புதிய முயற்சி கள், பொருளாதார வளர்ச்சி, நகரின் உட்கட்டமைப்பு மற்றும் பிற தொழில்நுட்ப வசதிகள் ஆகியவை வளர்ச்சியின் முக்கிய காரணிகளாக எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கின்றன. இவற்றில் அனைத்து காரணிகளிலும் பெங்களூரு மற்ற இந்திய நகரங்களைக் காட்டிலும் முன்னிலையில் உள்ளது. பெங்களூரு நகரத்தின் மேம் பட்ட உட்கட்டமைப்பு, தொழில்நுட்ப வசதி கள், மக்களின் வாழ்க்கை முறை, தனிநபர் வருமான வளர்ச்சி, நுகர்வு சந்தை என அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளன.

இந்தியச் சந்தைகளின் நுழைவாயி லாகவும், பொருளாதார வளர்ச்சியில் முன்னணியிலும் டெல்லி, மும்பை ஆகிய நகரங்கள் இருந்தாலும், எதிர்கால வளர்ச்சிக்கான முன்னணி நகரமாக பெங் களூரு மாறுவதற்கான அத்தனை சாத்தியங்களுடனும் உள்ளது.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, குறுகிய காலத்தில் பல்வேறு ஏற்ற இறக் கங்களையும், நிலையற்ற நிலையை யும் சந்தித்துக்கொண்டிருந்தாலும், வேகமாக வளரும் நாடுகளில் முன்னணி யில் இருக்கும் என்பது உறுதியாகத் தெரிகிறது. இதைப் பல்வேறு ஆய்வறிக் கைகளும் உறுதிபடுத்துகின்றன.

இந்தியாவில் 100 கோடிக்கு மேல் சொத்து உள்ளவர்கள் எண்ணிக்கை 39 சதவீதம் உயரும் என இந்த ஆய்வு கூறியுள்ளது. இந்தியாவுக்கு அடுத்து இடங்களில் பிலிப்பைன்ஸ் 38 சதவீதத் துடனும், சீனா 35 சதவீதத்துடனும் உள்ளன. இந்திய கோடீஸ்வரர்கள் தங்களின் பணப்புழக்கத்தைக் குறைத்துக்கொண்டு அவற்றை முதலீடுகளாக மாற்ற தீவிரம் காட்டுகிறார்கள். இதனால் அவர்களின் சொத்து மதிப்பு உயர்வதற்கான வாய்ப்பு கள் அதிகம் இருப்பதாகக் கூறுகிறது ஆய்வு.

இந்தியாவில் உள்ள கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில் 40 சதவீதம் பெங்களூரு வில்தான் உள்ளனர். இதனால் உலகின் எதிர்கால வளர்ச்சியின் முக்கிய நகரங் களில் பெங்களூரு இடம்பெற்றுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x