Published : 04 Mar 2019 11:36 AM
Last Updated : 04 Mar 2019 11:36 AM

இன்ஷூரன்ஸ் இப்போது ரொம்பவே ஈஸி

இந்தியாவில் இன்ஷூரன்ஸ் எடுக்கலாமா வேண்டாமா என்று யோசிப்பதை விட, இன்ஷூரன்ஸ் கம்பெனியிலிருந்து வரும் போன் அழைப்பை எடுக்கலாமா வேண்டாமா என்று யோசிப்பதுதான் பெரும் வேலையாகிவிட்டது என்றே சொல்லலாம். இன்ஷூரன்ஸ் மீது வெறுப்பு வர மிக முக்கிய காரணம் இது.

இரண்டாவது, எடுத்த இன்ஷூரன்ஸ் பாலிசியினால் எந்தப் பலனும் இல்லையே என்பது. மூன்றாவது, இன்ஷூரன்ஸ் பாலிசி இருந்தும் எதையாவது சொல்லி கிளெய்ம் தராமல் டபாய்க்கிறார்களே என்பது. இந்தக் காரணங்கள்தான் இன்ஷூரன்ஸ் எடுக்க நினைப்பவர்களையும் தடுக்கும் செயல்களாக உள்ளன.

ஆனால், இதையெல்லாம் தாண்டி எல்லோருக்கும் மிகவும் அவசியமானது இன்ஷூரன்ஸ் என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. சொல்லப்போனால் பணமிருப்பவர்கள், படித்தவர்கள் கூட இன்ஷூரன்ஸை எடுக்க தயக்கம் காட்டுகிறார்கள். “வட இந்திய பகுதிகளில் படிப்பறிவு குறைவான மாநிலங்களில் எல்லாம் கூட இன்ஷூரன்ஸ் குறித்த விழிப்புணர்வு இருக்கிறது.

அதிகளவில் இன்ஷூரன்ஸ் எடுக்கிறார்கள். ஆனால், தமிழகத்தில் குறிப்பாகச் சென்னையில் படித்தவர்கள் அதிகம். ஆனால், விழிப்புணர்வு குறைவாக இருக்கிறது” என்கிறார் பாலிசி பசார் நிறுவனத்தின் புராடக்ட்ஸ் பிரிவின் தலைவர் ரமணி வைத்யநாதன்.

மோட்டார் வாகனத்துக்கு இன்ஷூ ரன்ஸ் கட்டாயமாக்கப்பட்டிருக்கிறது. காரணம், அதில் ஒவ்வொரு நிமிடமும் ரிஸ்க் இருக்கிறது என்பதால்தான். அதேபோல்தான் இன்று வாழ்க்கையும் ஒவ்வொரு நிமிடமும் ரிஸ்க்கானதாகவே இருக்கிறது. எந்த நேரத்தில் எது நடக்குமென்றே தெரியாத நிலைதான் உள்ளது.

அதனால்தான் பணிபுரியும் நிறுவனங்களிலேயே ஹெல்த் இன்ஷூரன்ஸ் வழங்கப்படுகின்றன. இது வரவேற்கத்தக்கது. ஆனால், அதே சமயம் அது மட்டுமே போதுமானதாக இருப்பதில்லை. அது பெரும்பாலும் பொதுவானதொரு ஒரு ஹெல்த் இன்ஷூரன்ஸ். உங்களுக்கு என்ன நோய் இருக்கிறது, உங்களுக்கு என்ன காரணத்துக்காக இன்ஷூரன்ஸ் தேவைப்படுகிறது என்ற கேள்விகள் எதுவும் கேட்கப்படாமல் பொதுவாக வழங்கப்படும் இன்ஷூரன்ஸ் அது.

அதை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்குப் போனால், சிலவற்றுக்கு கிளெய்ம் கிடைக்கும், பலவற்றுக்கு கிளெய்ம் கிடைக்காமல் போகலாம். எனவே நம்முடைய தேவைக்கு ஏற்ப, நம்முடைய உடல்நிலைக்கு ஏற்ப சரியான இன்ஷூரன்ஸ் திட்டங்களை எடுத்துக்கொள்வது நல்லது.

இப்போதெல்லாம் இன்ஷூரன்ஸ் எடுப்பது என்பது மிகவும் எளிதாகிவிட்டது. பாலிசி பசார் போன்ற நிறுவனத்தின் இணையதளத்தில், எந்த ஏஜெண்டுகளின் தொல்லையும் இல்லாமல், நமக்கு தேவையான விவரங்களை ஆன்லைன் மூலமாகவே பார்த்து, நமக்கு தேவையான சரியான இன்ஷுரன்ஸ் பாலிசியை நாமே தேர்வு செய்யலாம். நம்மிடம் உரையாட சாட்பாட் வசதியையும் கொடுக்கின்றன.

நம்முடைய உடல் நிலை தொடர்பான உரையாடலை மருத்துவர் ஒருவர் நடத்துவார். அதனடிப்படையில் என்ன பாலிசி நமக்கு சரியாக இருக்கும் என்பதையும் இணையத்தில் காட்டுவார்கள். அதேசமயம் பல பாலிசிகளை ஒருங்கிணைத்து ஒப்பிட்டு காட்டுவதன் மூலம் எது நமக்கு சரியாக இருக்கும் என்பதை எளிதில் தேர்வு செய்ய முடியும்.

அதேபோல், ஒரு பாலிசியில் நமக்கு தேவையில்லாத கிளெய்ம்களைத்  தவிர்க்கும்போது பாலிசியின் விலை குறையும். அதாவது பிரீமியம் தொகை குறையும். ஆனால், அதுபோல நம் விருப்பத்துக்கு கிடைக்கும் பாலிசிகள் சந்தையில் மிகமிகக் குறைவு. அதுபோன்ற சில பிரத்யேகமான பாலிசிகளை உருவாக்கும் முயற்சிகளையும் பாலிசி பசார் நிறுவனம் எடுத்துவருகிறது. உதாரணம் ரெலிகேர் சூப்பர் டாப் அப் பாலிசி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x