Published : 05 Nov 2018 03:36 PM
Last Updated : 05 Nov 2018 03:36 PM

வெற்றி மொழி: உட்ரோ வில்சன்

1856-ம் ஆண்டு முதல் 1924-ம் ஆண்டு வரை வாழ்ந்த உட்ரோ வில்சன் அமெரிக்காவின் 28-வது அதிபர், எழுத்தாளர் மற்றும் கல்வியாளர். மேலும், நியூ ஜெர்ஸியின்  கவர்னராகவும் பணியாற்றியுள்ளார். தனது உயர்ந்த சிந்தனையிலான கருத்தியல் மற்றும் சீர்திருத்த செயல்பாடுகளுக்காக பெரிதும் அறியப்படுகிறார். உலக நாடுகளின் கூட்டமைப்பை உருவாக்க பெரும் முயற்சிகளை மேற்கொண்டவர். சமாதான முயற்சிகளை மேற்கொண்டமைக்காக 1919-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்றுள்ளார். சிறந்த அமெரிக்க அதிபர்களில் ஒருவராக, அறிஞர்கள் மற்றும் வரலாற்றாசிரியர்களால் குறிப்பிடப்படுகிறார்.

 

# நீரோட்டத்திற்கு எதிராக நீந்திச் செல்பவர் அதன் வலிமையை அறிந்திருக்கிறார்.

# நீங்கள் எதிரிகளை உருவாக்க விரும்பினால், எதையாவது மாற்ற முயற்சி செய்யுங்கள்.

# ஜனநாயகத்திற்கு பாதுகாப்பாக இந்த உலகம் உருவாக்கப்பட வேண்டும்.

# மனிதர்களுக்கு செய்யும் சேவையை விட உயர்வான மதம் வேறு எதுவுமில்லை.

# ஒரு சாந்தமான தீர்ப்பு என்பது ஆயிரம் அவசர ஆலோசணைகளின் மதிப்புடையது.

# பொது நலனுக்காக செயல்படுவதே மிகச்சிறந்த மதம்.

# நாம் உலகத்தின் குடிமக்கள். இதை நாம் அறியாமலிருப்பதே நமது காலத்தின் சோகம்.

# தலைமைத்துவம் எப்போதும் சமரசத்திற்கான கவசத்தை அணிந்திருப்பதில்லை.

# தற்கொலை செய்துகொள்ளப்போகும் ஒருவரை ஒருபோதும் கொலைசெய்ய முயற்சிக்காதீர்கள்.

# சுதந்திரத்தின் வரலாறு என்பது எதிர்ப்பின் வரலாறு.

# நடுநிலைமை என்பது ஒரு எதிர்மறையான சொல்.

# சுயநலத்தின் ரகசிய முகவர் எச்சரிக்கை.

# ஒரு தலைவரின் காது மக்களின் குரல்களை கவனிப்பதாக இருக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x