Published : 15 Oct 2018 11:00 AM
Last Updated : 15 Oct 2018 11:00 AM

போர்டு நிறுவனத்தின் ‘நியூ அஸ்பயர்’

போர்டு நிறுவனத்தின் அஸ்பயர் காரின் மேம்படுத்தப்பட்ட  ‘நியூ அஸ்பயர்’ சமீபத்தில் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது வடிவமைப்பிலும், செயல்திறனிலும் முந்தைய அஸ்பயர் மாடலை விட மேம்பட்டது. விலையும் சற்று குறைவு.

முந்தைய அஸ்பயர் மாடலில் 88 ஹெச்பி திறன் கொண்ட 1.2 லிட்டர் நான்கு சிலிண்டர் இன்ஜின் உள்ளது. புதிய அஸ்பயர் மாடல் 96 ஹெச்பி திறனுடன் மூன்று சிலிண்டர் இன்ஜினாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதனால் இதன் மைலேஜ் லிட்டருக்கு 18 கிமீ முதல் 26 கி.மீ வரை கிடைக்கிறது.

1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் இன்ஜினுடன் இரண்டு வகைகளில், ஏழு நிறங்களில் இந்த நியூ அஸ்பயர் கார் வெளிவந்துள்ளது. இவை 5 ஸ்பீட் மேனுவல் ட்ரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளன. டீசல் இன்ஜின் 100 ஹெச்பி திறன் கொண்டது.

கார் எந்த கோணத்திலிருந்து பார்த்தாலும் அழகாக இருக்கும்படி நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. முன் பக்கத்தில் புதிய டைனமிக் முப்பரிமாண செல்லுலார் கிரில் உள்ளது.

காரில் இடவசதி தாராளமாக உள்ளது. போர்டின்  விருது வென்ற சிங்க் 3 தொழில்நுட்பத்தில் இன்போடெயின்மென்ட் வசதிகள் சிறப்பாக உள்ளன. ஆண்டி-லாக் பிரேக்கிங் சிஸ்டமுடன் எலெக்ட்ரானிக் பிரேக் ஃபோர்ஸ் டிஸ்ட்ரிபூஷன் (இபிடி) பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன. பாதுகாப்புக்காக இரண்டு ஏர் பேக்குகள் உள்ளன. டாப் வேரியன்ட் கார்களில் ஆறு ஏர் பேக்குகள் தரப்பட்டுள்ளன.

இந்த காரில் பிரீமியம் அலாய் மற்றும் பெரிய 15 அங்குல டயர்கள் உள்ளன. இது கார் ஓட்டும் அனுபவத்தை மேலும் சிறப்பாக்குகிறது. இந்த நியூ அஸ்பயர் மாடல் ஐந்து வருடம் அல்லது 10 ஆயிரம் கிமீ உத்தரவாதம் தருகிறது. மேலும் பெட்ரோல் மாடல் கார்களின் பராமரிப்பு செலவு ஐந்தாவது வருடத்திலும் ரூ. 4 ஆயிரத்துக்குள் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனாலும், முந்தைய மாடலைவிட ரூ. 20 ஆயிரம் வரை விலை குறைவாக உள்ளது. இதன் பேஸ் வேரியன்ட் முதல் டாப் வேரியன்ட் வரையிலான கார்களின் விலை ரூ. 5.55 லட்சத்திலிருந்து ரூ. 8.14 லட்சத்துக்குள் உள்ளது. பெட்ரோல் மாடலின் ஆரம்ப விலை ரூ. 5.55 லட்சம். டீசல் மாடலின் ஆரம்ப விலை ரூ. 6.45 லட்சம். பெட்ரோல்-ஆட்டோமேட்டிக் காம்

பினேஷன் வேரியன்ட் மட்டும் ரூ. 8.49 லட்சம் என்ற நிலையில் உள்ளது. இந்த ஆட்டோமேட்டிக் வேரியன்ட் காரில் ஈகோஸ்போர்ட்டின் 123 ஹெச்பி, 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இதன் மைலேஜ் லிட்டருக்கு 16.3 கிமீட்டராக உள்ளது. 3+1 இருக்கை வசதி கொண்ட காம்பேக்ட் செடான் கார் பிரிவில் சிறந்த காராக இந்த புதிய அஸ்பயர் மாடல் கார்கள் உள்ளன. அளவான குடும்பத்துக்கான அம்சமான காராக இது உள்ளது.

வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பதற்கும் அதிகமான வசதிகள், பலன்கள் இந்த காரில் உள்ளன. இதனால் இந்தப் பிரிவில் உள்ள கார்களுக்கு மத்தியில் தனித்து தெரிகிறது. ஹோண்டா மேஸ், மாருதி சுசூகி டிசையர், ஃபோக்ஸ்வேகன் அமியோ, ஹுண்டாய் எக்சென்ட் உள்ளிட்டவற்றுக்குப் போட்டியாக இந்த கார் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x