Published : 10 Sep 2018 12:27 PM
Last Updated : 10 Sep 2018 12:27 PM

மஹிந்திராவின் புது வரவு `மராஸ்ஸோ’ 

மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனம் மராஸ்ஸோ என்ற பெயரிலான எஸ்யுவி மாடலை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. மராஸ்ஸோ என்பது ஸ்பெயின் வார்த்தையாகும். இதற்கு ஆங்கிலத் தில் ஷார்க் என்று அர்த்தம். அதாவது சுறா என்று தமிழில் அழைக்கலாம்.

கடல் நீரை கிழித்துக் கொண்டு முன் னேறும் சுறாவைப் போல, இந்த வாகன மும், காற்றைக் கிழித்துக்கொண்டு முன்னேறிச் செல்லும் வகையில் (Aerodynamic வடிவமைக்கப்பட்டுள்ளது.

மஹிந்திரா நிறுவனத்தின் வட அமெரிக்க தொழில்நுட்ப மையத்தில் உள்ள குழுவினர் மற்றும் பினின்ஃபிரினா வடிவமைப்புக் குழுவினரும் இந்த காரை வடிவமைத்துள்ளனர்.

சர்வதேச அளவில் மிகச் சிறந்த வடிவமைப்பாக இது உருவாக்கப்பட்டுள் ளதாக நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பவன் கோயங்கா தெரிவித்துள்ளார். இது வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் பூர்த்தி செய்யும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

3 வரிசை இருக்கைகளை கொண் டுள்ள இந்த வாகனத்தில் அதிகபட்சமாக 8 பேர் வரை பயணிக்க முடியும். முதல் இரு வரிசை இருக்கைகளில் அமர் வோர், ‘வசதியாக அமர்வதற்கு ஏற்ப, தேவையான இடம் தந்து இந்த வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அதிர்வு இல்லாத, மென்மையான பயணத்தை வழங்க வல்லது. எளிமை யாகக் கையாளும் வசதியுள்ள இந்த வாகனத்தின் உள்ளே, என்ஜின் ஒலி கூட உட்புகாத வகையில் அமைதி உறுதி செய்யப்பட்டுள்ளது.

வாகனத்தின் உள்புற குளிரூட்டலைப் பொறுத்தவரை, இதுவரை எந்த வகை வாகனத்திலும் இல்லாத புதிய அணுகுமுறை - அதாவது, வாகனத் தைச் சுற்றி எல்லா திசையில் இருந் தும் குளிர்ந்த காற்று வீசும் வசதி செய்யப் பட்டுள்ளது. அதனால் நேரடியாகவும், காற்றில் பரவியும் வாகனத்துக்குள் உள் ளிருக்கும் அனைவருக்கும் ஒரே நேரத் தில் குளிர்ச்சியான சூழல் கிடைப்பது உறுதியாகிறது.

2020-ஆம் ஆண்டின் வாகன பாது காப்புத் தர அம்சங்களைக் கொண்டதாக இப்போதே அறிமுகமாகும் இந்த மராஸ்ஸோ வாகனம், 4 சக்கரங்களிலும் டிஸ்க் பிரேக்குகளைக் கொண்டுள்ளது. அதனால், மிகக் குறைந்த கால.. தூர இடைவெளியில் கூட வாகனத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்தி முற்றிலுமாக நிறுத்தி, விபத்துகளைத் தவிர்த்துவிட முடியும். மேலும், முன்புற இருக்கை இரண்டிலுமே விபத்து பாதுகாப்புக்கு உதவும் 2 காற்று பைகள் (Air Bags) இடம்பெற்றுள்ளன

இதில் மஹிந்திரா நிறுவனத்தின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஆப் பிள் கார் பிளே, ஆண்டிராய்டு ஆட்டோ, ஸ்டீரிங்கில் ஆடியோவை கட்டுப்படுத் தும் வசதி, பருவ நிலைக்கேற்ப கட்டுப் படுத்தும் வசதி, வெளிச்சத்தை உமிழும் முகப்பு விளக்குகள், பகலில் எரியும் விளக்குகள் (டிஆர்எல்) ஆகியன இதில் உள்ள சிறப்பம்சங்களாகும்.

இந்த கார் நிறுவனத்தின் நாசிக் ஆலை யில் தயாரிக்கப்படுகிறது. இதில் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பயன்படுத்தப் படுகிறது. இது 121 பிஹெச்பி சக்தியை யும் 300 நியூட்டன் மீட்டர் டார்க் திறனை யும் வெளிப்படுத்தக் கூடியது. இது 6 கியர்களைக் கொண்டது. இப்போதைக்கு ஆட்டோமேட்டிக் கியர்களை கொண்ட காரை தயாரிக்கும் திட்டமில்லை என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப் பினும் ஆட்டோமேட்டிக் டிரான்ஸ்மிஷன் கார்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் தயாரிக்கப் போவதாக நிறுவனம் தெரி வித்துள்ளது. இந்த கார் சோதனை ஓட்டத்தில் ஒரு லிட்டர் டீசலுக்கு 17.6 கி.மீ. தூரம் ஓடியதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதன் உள்புறத்தின் டேஷ் போர்டு கறுப்பு வெள்ளை நிறத்தில் உள்ளது. விமானங்களில் உள்ளதைப் போன்ற வடிவமைப்பில் ஹேண்ட் பிரேக் உள்ளது. எல்இடி ஒளி உமிழும் டயல் போர்டு இதில் உள்ளது. முதல் முறையாக மேற்கூரையிலிருந்து ஏசி பரவும் விதமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால் பின் இருக்கையில் இருப்பவர்களுக்கும் மிகச் சிறப்பான குளிர் காற்று வீசும். இத்தகைய கார் பிரிவில் இதுபோன்ற வசதி அளிக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

பயணத்தை இனிமையாக்க இதில்7 அங்குல தொடு திரை உள்ளது.

மெருன் (Mariner Maroon), பர்பிள் (Poseidon Purple), அக்வா மெரின் (Aqua Marine), வெள்ளை (Iceberg White), கருப்பு (Oceanic Black) மற்றும் சில்வர் (Shimmering Silver) என 6 வெவ்வேறு வண்ணங்களில் இந்த வாகனம் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது.

மஹிந்திரா தயாரிப்புகள் பொதுவாக பெரும் வரவேற்பைப் பெரும். அந்த வரிசையில் மராஸ்ஸோவுக்கும் நிச் சயம் இடமுண்டு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x